/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நான்கு ரோடு சந்திப்பில் பிளக்ஸ் பேனர்கள் ஆக்கிரமிப்பு
/
நான்கு ரோடு சந்திப்பில் பிளக்ஸ் பேனர்கள் ஆக்கிரமிப்பு
நான்கு ரோடு சந்திப்பில் பிளக்ஸ் பேனர்கள் ஆக்கிரமிப்பு
நான்கு ரோடு சந்திப்பில் பிளக்ஸ் பேனர்கள் ஆக்கிரமிப்பு
ADDED : ஜூன் 06, 2025 11:00 PM

மடத்துக்குளம்,; மடத்துக்குளம் நால் ரோட்டில், பிளக்ஸ் பேனர்கள் ஆக்கிரமிப்பால், ரோடுகளில் வாகனங்கள் வருவது தெரியாமல், விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.
திருப்பூர் மாவட்ட எல்லையில் மடத்துக்குளம் அமைந்துள்ளது. இங்கு கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை மற்றும் தாராபுரம் ரோடு, குமரலிங்கம் ரோடு என நான்கு ரோடு சந்திப்பு பகுதியில், ஆளும் கட்சியினர் மற்றும் தனியார் நிறுவன விளம்பர பிளக்ஸ்பேனர்கள் நான்கு ரோடுகளிலும், ரோடுகளை மறித்தும், பெரிய அளவில் வாகனங்கள் வருவது தெரியாதவாறு மறைத்தும் ஏராளமான பிளக்ஸ்பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
நான்கு ரோடுகளிலும் அதிகளவு வாகன போக்குவரத்து உள்ள நிலையில், எதிரே வரும் வாகனங்கள் தெரியாமலும், வாகனங்களை திருப்ப முடியாமலும், வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களால், அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
அதே போல், அரசு மருத்துவமனை, பஸ் ஸ்டாண்ட், பிரதான ரோடுகளை மறித்தும், பிளக்ஸ்பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
இவற்றை அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு பல முறை பொதுமக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும், அரசு உத்தரவு மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை மீறியும், விதி மீறி அமைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை போலீசார் ,பேரூராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.