/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கால்வாயில் பிளாஸ்டிக் பாட்டில்கள்; பொதுச்சுகாதாரம் பாதிப்பு
/
கால்வாயில் பிளாஸ்டிக் பாட்டில்கள்; பொதுச்சுகாதாரம் பாதிப்பு
கால்வாயில் பிளாஸ்டிக் பாட்டில்கள்; பொதுச்சுகாதாரம் பாதிப்பு
கால்வாயில் பிளாஸ்டிக் பாட்டில்கள்; பொதுச்சுகாதாரம் பாதிப்பு
ADDED : செப் 21, 2025 10:56 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், குடிநீர், குளிர்பானம், உணவுப் பொருட்கள் என, அனைத்திலும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து விட்டது. அதிலும், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி வீசி எறியப்படும் பிளாஸ்டிக் பாட்டில், டம்ளர், பாக்கெட் போன்றவற்றால் விளைநிலங்கள், சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
நகரைப் பொறுத்தமட்டில், கழிவு நீர் செல்லும் சாக்கடை கால்வாய்களில், பிளாஸ்டிக் பாட்டில்கள் நிறைந்து காணப்படுகிறது. மழை பெய்யும் போது, வெள்ளம் வழிந்தோட வழியின்றி கழிவுநீருடன் ரோட்டில் பாய்கிறது. கால்வாயிலும் அடைப்பு ஏற்பட்டு, சுகாதாரம் பாதிக்கிறது.
இந்நிலையில், பயன்படுத்திய பின் வீசி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்க, பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் நகராட்சி சார்பில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது. இது, பிளாஸ்டிக் பாட்டிலை போன்றே வடிவமைக்கப்பட்டு, பயன்படுத்திய பிளாஸ்டிக் பாட்டில்களை எளிதில் உள்ளே போடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல, வணிக கடைகள், ஓட்டல்கள் நிறைந்த பகுதிகளிலும், கூண்டு வைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
தன்னார்வலர்கள் கூறியதாவது:
நகரில், பெரிய ஓட்டல்களில், வாடிக்கையாளர் விட்டுச் செல்லப்படும் காலி பிளாஸ்டிக் பாட்டில்கள் முறையாக சேகரம் செய்யப்பட்டு, மறு சுழற்சிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால், சிறிய ஓட்டல்களைபொறுத்தமட்டில், காலையில் சுத்தப்படுத்தும் பணியின்போது, அருகே உள்ள கால்வாய்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள் வீசப்படுகிறது.
இதனை கண்டறிந்து தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, தினமும், குப்பை சேகரிக்கும் போது, காலி பிளாஸ்டிக் பாட்டில்களையும் சேகரம் செய்ய முனைப்பு காட்ட வேண்டும்.
இதனால், பொது இடங்களில் வீசி எறியப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களின் எண்ணிக்கை குறையும். மார்க்கெட், கடைவீதி, மருத்துவமனை, பஸ் ஸ்டாப் உள்ளிட்ட இடங்களிலும் தன்னார்வ பங்களிப்புடன் இணைந்து பிளாஸ்டிக் சேகரிப்பு கூண்டு வைக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.