ரஷ்யா தாக்குதலை நிறுத்த சீனா உதவும்: டிரம்ப் நம்பிக்கை
ரஷ்யா தாக்குதலை நிறுத்த சீனா உதவும்: டிரம்ப் நம்பிக்கை
UPDATED : அக் 25, 2025 08:45 PM
ADDED : அக் 25, 2025 08:44 PM

வாஷிங்டன்: உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா நிறுத்தச் செய்வதற்கு சீனா உதவி செய்யும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்துவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். ஆனால், இதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. இதனால் வெறுத்துப் போன டிரம்ப், ' ஒவ்வொரு முறையும் புடினுடன் பேசும்போது நன்றாக பேசுகிறார். ஆனால், போர் மட்டும் நிற்காமல் தொடர்ந்து கொண்டே செல்கிறது' என விரக்தியுடன் கூறினார். இதனையடுத்து அந்நாட்டுக்கு எதிராக தடைகளை விதித்துள்ளார்.
இந்நிலையில் மலேஷியாவில் நடக்கும் ஆசியான் மாநாட்டில் பங்கேற்க டிரம்ப் கோலாலம்பூர் செல்கிறார். இங்கு சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்து வர்த்தக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இந்த நிலையில் டிரம்ப் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது: உக்ரைன் மீதான தாக்குதல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஜின்பிங் உடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன். இந்த தாக்குதலை ரஷ்யா நிறுத்துவதற்கு தேவையான உதவிகளை சீனா செய்வதை நான் பார்க்க விரும்புகிறேன். ஷி ஜின்பிங் உடன் எனக்கு சிறந்த நட்பு உள்ளது. இந்த போர் நிறுத்தப்படுவதை பார்க்க அவரும் விரும்புகிறார். இவ்வாறு டிரம்ப் கூறினார்.

