தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பண்டிகையால் அதிகரித்த பிளாஸ்டிக் பயன்பாடு

பண்டிகையால் அதிகரித்த பிளாஸ்டிக் பயன்பாடு

பண்டிகையால் அதிகரித்த பிளாஸ்டிக் பயன்பாடு


ADDED : அக் 21, 2025 08:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 21, 2025 08:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாாச்சி: தீபாவளி பண்டிகையால், நகரில், பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகள் பயன்பாடு அதிகரித்ததாக புகார் எழுந்துள்ளது.

பொள்ளாச்சி நகரில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு, புத்தாடை, ஸ்வீட் கார வகைகள் விற்பனை அமோகமாக நடந்தது. பெரும்பாலும் புத்தாடைகள், பட்டாசு, ஸ்வீட் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைககளில் வழங்கப்பட்டன.

இவற்றில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு அரசு தடை விதித்துள்ள நிலையில், அதன் பயன்பாடு அதிகரித்தே காணப்பட்டது.

தன்னார்வலர்கள் கூறியதாவது: தமிழக அரசு, 'மஞ்சப்பை' என்ற பெயரில், பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, துணிப்பைகளை பயன்படுத்துவோம் என்ற வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

நகராட்சி அதிகாரிகள், சமீபத்தில், நான்கு வாகனங்களில் இருந்து, 3 டன் வரையிலான பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். அதேபோல, நகரில் உள்ள அனைத்து கடைகளில் ஆய்வு செய்து, பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us