/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாறைக்குழியில் பிளாஸ்டிக் கழிவு குவிப்பு; முழுமையாக அகற்ற அறிவுறுத்தல்
/
பாறைக்குழியில் பிளாஸ்டிக் கழிவு குவிப்பு; முழுமையாக அகற்ற அறிவுறுத்தல்
பாறைக்குழியில் பிளாஸ்டிக் கழிவு குவிப்பு; முழுமையாக அகற்ற அறிவுறுத்தல்
பாறைக்குழியில் பிளாஸ்டிக் கழிவு குவிப்பு; முழுமையாக அகற்ற அறிவுறுத்தல்
ADDED : ஜூன் 09, 2025 09:37 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, காணியாலம்பாளையத்தில் உள்ள தனியார் பாறைக்குழியில் பிளாஸ்டிக் கழிவு குவிக்கப்பட்டதால், சுகாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கிணத்துக்கடவு அருகே, காணியாலம்பாளையம் செல்லும் ரோட்டில் விவசாயி பாலு என்பவருக்கு சொந்தமான இடம் உள்ளது. அந்த இடத்தில், குவாரி செயல்பட்டது. கடந்த, 2008ல் லைசென்ஸ் முடிவு பெற்ற பின், குவாரி செயல்படாமல் பாறை குழியாக உள்ளது. இதில், அதிக அளவு தண்ணீர் நிறைந்து இருந்தது.
இந்தப் பாறைக்குழியில், பாலுவின் அனுமதியோடு கடந்த 10 நாட்களாக சில தனியார் கம்பெனியின், பழைய சேப்டி ஷூ, பிளாஸ்டிக் பொருட்கள், பேப்பர் கழிவு மற்றும் இதர பிளாஸ்டிக் கழிவு மூட்டைகளாக கட்டி தண்ணீர் தேக்கம் அடைந்த பகுதியில் கொட்டி சென்றனர்.
இதை மறைக்க, அவரது இடத்தில் இருந்து மண் எடுத்து குப்பை மூட்டைகள் மீது மூடியும், சில பகுதியில் தீ வைத்து எரித்தும் வந்தார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன், ரோட்டோரம் உள்ள புதரை அகற்றும் போது, ரோட்டில் செல்லும் பொது மக்களுக்கு பாறை குழியில் குப்பை கொட்டப்படுவது தெரியவந்தது.
மேலும், இங்கு கொட்டப்பட்டிருந்த குப்பையில் இருந்த பிளாஸ்டிக் பேப்பர் காற்றுக்கு பறந்து ரோட்டில் விழுந்தது. இத்துடன் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசத்துவங்கியது.
நேற்று, மீண்டும் குப்பை மீது மண் குவியலை குவிக்க முயன்ற போது, இரண்டு டிராக்டர்கள் மற்றும் ஒரு பொக்லைன் இயந்திரத்தை மக்கள் தடுத்து நிறுத்தினர்.
இதைத்தொடர்ந்து, வருவாய்த்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த, போலீசார் மற்றும் வருவாய் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும், கொட்டப்பட்ட குப்பை மற்றும் மூடப்பட்ட குப்பையை முழுவதுமாக அகற்றம் செய்ய வேண்டும், என, இடத்தின் உரிமையாளரை வருவாய் துறையினர் எச்சரித்தனர்.
பாறைக்குழியில் கொட்டப்பட்ட குப்பை, உள்ளூர் தனியார் நிறுவனத்தை சார்ந்ததா, கேரளா மாநிலத்தில் இருந்து கொண்டு வந்து கொட்டப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.

