/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிளாஸ்டிக் கழிவுகள் நீரோடையில் குவிப்பு
/
பிளாஸ்டிக் கழிவுகள் நீரோடையில் குவிப்பு
ADDED : ஏப் 09, 2025 10:12 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, மயானம் அருகே உள்ள நீரோடையில் பிளாஸ்டிக் கழிவு குவிந்து கிடப்பதால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கிணத்துக்கடவு மயானம் செல்லும் ரோட்டில், வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. இப்பாதையில், டாஸ்மாக் மதுக்கடை எதிரே நீரோடை உள்ளது.
நீரோடை அருகே உள்ள மயானம் பகுதியில் மின்மயான கட்டுமான பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன் துவங்கப்பட்டது. அப்போது, இந்த நீரோடை சுத்தம் செய்யப்பட்டது.
ஆனால், தற்போது இந்த நீரோடையில் காலி மது பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர் மற்றும் காகித கழிவு, உணவு பொட்டலங்கள் என ஏராளமாக குவிக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
எனவே, இப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவை கொட்டுபவர்கள் மீது, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது பெய்யும் கோடை மழையால், நீரோடையில் ஈரப்பதம் நிலவி வருகிறது.
வரும் நாட்களில் நீர் தேங்குவதற்கு வாய்ப்புள்ளதால், இங்கு குப்பை கொட்டாத படி, பேரூராட்சி நிர்வாகம் சார்பில், கம்பி வேலி அமைக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.

