ADDED : மார் 14, 2026 06:47 AM

அ நிறம் | அளவு
போத்தனூர்: மதுக்கரை நகராட்சியின், 25வது வார்டுக்குட்பட்ட மேப்பிள் கார்டன், பாலாஜி கார்டன், எம்.எப்.கார்டன் மற்றும் என்.வி.எஸ்.ரியல்டர்ஸ் பகுதிகளில், 150க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இதில் பாலத்துறை மெயின் ரோட்டிலிருந்து மேப்பிள் கார்டன் செல்லும் சாலையின் வலதுபுறம் பிளாஸ்டிக் கழிவு மூட்டைகள் போடப்பட்டுள்ளன.
இவை உள்ளூர் நபர்களால் போடப்பட்டதா அல்லது கேரளாவிலிருந்து கொண்டு வரப்பட்டு கொட்டப்பட்டதா என தெரியவில்லை. நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதியினரின் எதிர்பார்ப்பு.
