/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிளாஸ்டிக் கழிவு மறுசுழற்சி; களம் இறங்குகிறது 'ராக்'
/
பிளாஸ்டிக் கழிவு மறுசுழற்சி; களம் இறங்குகிறது 'ராக்'
பிளாஸ்டிக் கழிவு மறுசுழற்சி; களம் இறங்குகிறது 'ராக்'
பிளாஸ்டிக் கழிவு மறுசுழற்சி; களம் இறங்குகிறது 'ராக்'
ADDED : நவ 21, 2024 11:23 PM
கோவை; உணவு மற்றும் காய்கறி கழிவுகள், அனைத்து வகையான பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி மூலம் பயன்படுத்துவதற்கான முன்னெடுப்பை துவக்கியுள்ள, 'ராக்' அமைப்பு, செயல் விளக்க கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.
உணவு கழிவு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை தனியாக சேகரித்து மறுசுழற்சிக்கு பயன்படுத்தும் நிறுவனத்தை துவக்குவதற்கான முன்னெடுப்பை, 'கோயமுத்துார் குடியிருப்போர் விழிப்புணர்வு சங்கம் - ராக்' என்கிற அமைப்பு ஆரம்பித்திருக்கிறது. இதற்காக ஓட்டல்கள், கல்லுாரி விடுதிகள், தொழிற்கூட உணவகங்கள், திருமண மண்டபங்கள், காய்கறி மண்டிகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை நிர்வகிப்பவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.
காய்கறி மற்றும் உணவுக்கழிவுகளை இயற்கையாக மறு சுழற்சி செய்யவும், அனைத்து வகையான பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யவும் செயல் விளக்க கூட்டத்தை 'ராக்' அமைப்பு நடத்த இருக்கிறது.
அழகான கோவையை உருவாக்க முன்னெடுக்கப்பட்டு உள்ள இந்நிகழ்வில் பங்கேற்க விரும்பும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், அடுக்குமாடி குடியிருப்புகள், கேட்டட் கம்யூனிட்டிகள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், கோவை மாநகராட்சியின் அனுமதி பெற்ற மறு சுழற்சி செய்யும் நிறுவனங்களின் பிரதிநிதிகள், 98422 33446 என்ற எண்ணுக்கு, 'ராக்' அமைப்பின் செயலர் ரவீந்திரனை தொடர்பு கொள்ளலாம்.