sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஒய்.எம்.சி.ஏ., மாவட்ட கூடைப்பந்து 'நாக் அவுட்' சுற்றில் வீரர்கள் சுறுசுறுப்பு

/

ஒய்.எம்.சி.ஏ., மாவட்ட கூடைப்பந்து 'நாக் அவுட்' சுற்றில் வீரர்கள் சுறுசுறுப்பு

ஒய்.எம்.சி.ஏ., மாவட்ட கூடைப்பந்து 'நாக் அவுட்' சுற்றில் வீரர்கள் சுறுசுறுப்பு

ஒய்.எம்.சி.ஏ., மாவட்ட கூடைப்பந்து 'நாக் அவுட்' சுற்றில் வீரர்கள் சுறுசுறுப்பு


ADDED : ஜூலை 02, 2025 10:43 PM

Google News

ADDED : ஜூலை 02, 2025 10:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை நேரு ஸ்டேடியம் எதிரே கூடைப்பந்து மைதானத்தில், 69வது ஒய்.எம்.சி.ஏ., வெங்கடகிருஷ்ணன் டிராபி போட்டி கடந்த மாதம், 25ம் தேதி துவங்கியது; வரும், 6ம் தேதி நிறைவடைகிறது. மாவட்ட அளவிலான இப்போட்டியில், மினி பாய்ஸ், மினி கேர்ல்ஸ், ஜூனியர் பாய்ஸ், மென் ஆகிய பிரிவுகளில், 59 அணிகள் பங்கேற்றுள்ளன.

பல்வேறு சுற்றுகளை அடுத்து நடந்த, 'மினி கேர்ஸ்' பிரிவுக்கான இறுதிப்போட்டியில், எஸ்.வி.ஜி.வி.,-ஏ அணி, 50-29 என்ற புள்ளிகளில் அல்வெர்னியா பள்ளியை வென்று முதல் பரிசை தட்டியது.

'மினி பாய்ஸ்' பிரிவில், ஆர்.எல்.எம்.எச்.எஸ்.,-ஏ அணி, 63-25 என்ற புள்ளிகளில், பி.எஸ்.ஜி., சர்வஜன பள்ளி அணியை வென்று, முதலிடம் பிடித்தது.தொடர்ந்து, ஆண்களுக்கான போட்டி 'நாக் அவுட்' முறையில் நடந்து வருகிறது. இதில், பேசன் பொள்ளாச்சி அணி, 114-56 என்ற புள்ளிகளில் ஸ்பைஸ் அணியை வென்றது. 10 எக்ஸ் அணியினர், 60-46 என்ற புள்ளிகளில், பீளமேடு அணியை தோற்கடித்தனர்.

கே.பி.ஆர்., அணி, 74-68 என்ற புள்ளிகளில், பெர்க்ஸ் அணியையும் வென்றன. ஆர்.எஸ்.சி., அணி, 73-23 என்ற புள்ளிகளில், பிரெண்ட்ஸ் ஹெல்த் அணியையும் வென்றது. தொடர்ந்து போட்டிகள் நடந்துவருகின்றன.






      Dinamalar
      Follow us