/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.7.95 கோடியில் வீரர்கள் தங்கும் விடுதி; 18 மாதங்களுக்குள் கட்டி முடிக்க திட்டம்

ADDED : ஜூலை 12, 2025 01:12 AM

கோவை; கோவை, மதுரை, கரூர், அரியலுார், திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களில் புதிய ஹாக்கி மைதானங்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு விடுதிகள் அமையவுள்ளன.
இதற்கென, சென்னை தலைமை செயலகத்தில் இருந்தவாறு, துணை முதல்வர் உதயநிதி ரூ.64.43 கோடி மதிப்பீட்டிலான இக்கட்டடங்களுக்கு, காணொலி காட்சி வாயிலாக, நேற்று அடிக்கல் நாட்டி வைத்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில், இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கோவையில் மாநகராட்சி கூடைப்பந்து மைதானம் அருகே விளையாட்டு வீரர்கள் தங்கும் விதமாக, ரூ.7.95 கோடி மதிப்பீட்டில், 89 சென்ட் இடத்தில் விடுதி அமைக்கப்படுகிறது.
வீரர்கள் தங்குவதற்கு, 70 அறைகள், விளையாட்டு உபகரணங்கள் பாதுகாப்பு அறை, ஜிம், வார்டன் அறை, அலுவலகம், தங்கும் அறை, கழிவறைகள், படிக்கும் அறை உள்ளிட்ட வசதிகள் இடம்பெறுகின்றன. தரைதளம் மற்றும் முதல் தளத்துடனான இக்கட்டட பணிகளை, 18 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நேற்று நேரு ஸ்டேடியம் அருகே நடந்த அடிக்கல் நாட்டு விழாவில், மாவட்ட கலெக்டர், மாவட்ட விளையாட்டு அலுவலர் புவனேஸ்வரி, எஸ்.டி.ஏ.டி., மண்டல முதுநிலை மேலாளர் அருணா உட்பட பலர் பங்கேற்றனர்.