/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அசால்டாக 'சதம்' அடித்து அசத்தும் வீரர்கள்; ரசிகர்கள் உற்சாகம்! சி.டி.சி.ஏ., டிவிஷன் கிரிக்கெட்டில் வெளிப்படும் தனித்திறமை

ADDED : ஏப் 23, 2025 11:14 PM

கோவை; சி.டி.சி.ஏ., டிவிஷன் போட்டிகளில் வீரர்கள் 'சதம்', அரை சதம் அடித்து தனித்திறமையை வெளிப்படுத்தி வருவது, ரசிகர்களிடம் உற்சாகத்தை தந்துள்ளது.
கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் (சி.டி.சி.ஏ.,) சார்பில் ஒன்றாவது டிவிஷன் போட்டி, சூர்யபாலா கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வருகிறது.
ஜாலி ரோவர்ஸ் கிரிக்கெட் கிளப் அணியும், சூர்யபாலா கிரிக்கெட் கிளப் அணியும் மோதிய போட்டியில், பேட்டிங் செய்த ஜாலி ரோவர்ஸ் அணியினர், 50 ஓவரில், 7 விக்கெட்டுக்கு, 370 ரன் எடுத்தனர்.
அணி வீரர் கவுசிக், 110 ரன், நிர்மல் குமார், 93 ரன், ஹிரிசில்கேஸ் திரிலோசன், 55 ரன் எடுத்தனர். எதிரணி வீரர் சொக்கலிங்கம் நான்கு விக்கெட் வீழ்த்தினார்.
அடுத்து விளையாடிய, சூர்யபாலா அணியினர், 50 ஓவரில், 9 விக்கெட்டுக்கு, 254 ரன் எடுத்தனர். வீரர் முகேஷ், 71 ரன், ஹரிஹரசுதன், 54 ரன், ஷிகாப்தீன், 39 ரன் எடுத்தனர். எதிரணி வீரர் ராகுல் ஐந்து விக்கெட் வீழ்த்தினார்.
இரண்டாவது டிவிஷன் போட்டியில் விஜய் கிரிக்கெட் கிளப் அணியும், சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் நினைவு கிரிக்கெட் கிளப் அணியும் விளையாடின. பேட்டிங் செய்த விஜய் கிரிக்கெட் கிளப் அணியினர், 50 ஓவரில், 6 விக்கெட்டுக்கு, 336 ரன் எடுத்தனர்.
வீரர் அருண், 162 ரன், பிரபு குமார், 74 ரன் எடுக்க, எதிரணி வீரர் செந்தில்குமார் மூன்று விக்கெட் வீழ்த்தினார். சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் அணியினர், 38.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 216 ரன் மட்டுமே எடுத்தனர். வீரர் ரித்திக் அதிகபட்சமாக, 74 ரன் எடுத்தார்.
ஐந்தாவது டிவிஷன் போட்டியில், வசந்தம் கிரிக்கெட் கிளப் அணியும், சீஹாக்ஸ் கிரிக்கெட் கிளப் அணியும் மோதின. பேட்டிங் செய்த வசந்தம் கிரிக்கெட் கிளப் அணி, 50 ஓவரில், 7 விக்கெட்டுக்கு, 255 ரன் எடுத்தது.
வீரர்களான அரவிந்த், 61 ரன், பால்ராஜ், 54, சிவசங்கர், 52 ரன் எடுத்தனர். எதிரணி வீரர் கஜேந்திரன் மூன்று விக்கெட் வீழ்த்தினார்.
அடுத்து விளையாடிய சீஹாக்ஸ் அணியினர், 33.2 ஓவரில் நான்கு விக்கெட் இழப்புக்கு, 257 ரன் எடுத்து வெற்றி பெற்றனர். வீரர் ஜெரிஸ், 77 ரன், ஹர்ஜித், 74 ரன், ரஞ்சித்குமார், 55 ரன் எடுத்தனர். தொடர்ந்து, போட்டிகள் நடந்து வருகின்றன.