/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்ட ஓபன் டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் வீரர்கள் அதிரடி
/
மாவட்ட ஓபன் டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் வீரர்கள் அதிரடி
மாவட்ட ஓபன் டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் வீரர்கள் அதிரடி
மாவட்ட ஓபன் டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் வீரர்கள் அதிரடி
ADDED : ஜூன் 29, 2025 11:45 PM

கோவை; கோவை மாவட்ட இரட்டையர் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி, சரவணம்பட்டியில் நடந்தது. குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் உட்பட, 50க்கும் மேற்பட்ட மாவட்ட, மாநில வீரர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு சுற்றுகளில் 'லீக்' மற்றும் 'நாக் அவுட்' போட்டிகள் இடம்பெற்றன.
தொடர்ந்து நடந்த முதல் அரையிறுதியில், திருக்குமரன்-பாலு ஜோடி, பரத்-பரத்குமார் ஜோடியை, 11-6, 9-11, 11-8, 11-8 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினர். இரண்டாவது அரையிறுதியில் சங்கர்-பீஷ்மன் ஜோடி கிருஷ்ணகுமார்-நவீன் ஜோடியை, 15-13, 11-7, 11-7 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.
பரபரப்பான இறுதிப் போட்டியில், திருகுமரன்-பாலு ஜோடி, சங்கர்-பீஷ்மன் ஜோடியை, 8-11, 11-7, 11-8, 9-11, 12-10 என்ற புள்ளிகளில் வீழ்த்தி, முதல் பரிசை தட்டிச் சென்றனர்.
மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்கள், அடுத்த கட்டத்துக்கு செல்லும் வகையில், தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்கத்தினர் சிறப்பு பயிற்சி அளிக்க உள்ளனர்.