/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சி.டி.சி.ஏ., டிவிஷன் கிரிக்கெட்டில் வீரர்கள் அமர்க்கள ஆட்டம்
/
சி.டி.சி.ஏ., டிவிஷன் கிரிக்கெட்டில் வீரர்கள் அமர்க்கள ஆட்டம்
சி.டி.சி.ஏ., டிவிஷன் கிரிக்கெட்டில் வீரர்கள் அமர்க்கள ஆட்டம்
சி.டி.சி.ஏ., டிவிஷன் கிரிக்கெட்டில் வீரர்கள் அமர்க்கள ஆட்டம்
ADDED : செப் 17, 2025 10:20 PM
கோவை; கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் (சி.டி.சி.ஏ.,) சார்பில், ஐந்தாவது டிவிஷன் கிரிக்கெட் போட்டி, பி.எஸ்.ஜி., - ஐ.எம்.எஸ்., உள்ளிட்ட மைதானங்களில் நடக்கிறது. கோயம்புத்துார் ரைடர்ஸ் கிரிக்கெட் அகாடமியும், கே.எப்.சி.சி., அணியும் மோதின.
கோயம்புத்துார் ரைடர்ஸ் அணியினர், 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 132 ரன் எடுத்தனர். வீரர் நாகராஜ், 30 ரன் எடுத்தார்.
கே.எப்.சி.சி., அணியினர், 24 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்புக்கு, 134 ரன் எடுத்தனர். வீரர்கள் ஜெயகுமார், 42 ரன், மணிகண்டன், 35 ரன், பிரசாந்த், 32 ரன் எடுத்தனர்.
இரண்டாவது டிவிஷன் போட்டியில், சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் மெமோரியல் கிரிக்கெட் அணியும், சீ லயன் ரெயின்போ 1972 எம்.எம்.சி.சி., அணியும் மோதின.
சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் அணியினர், 30.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 78 ரன் எடுத்தனர். எதிரணி வீரர்கள் மிதுன் நான்கு விக்கெட், நவீன்குமார் மூன்று விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து விளையாடிய சீ லயன் ரெயின்போ அணியினர், 14.3 ஓவரில் நான்கு விக்கெட் இழப்புக்கு, 82 ரன் எடுத்து வெற்றி பெற்றனர்.