/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விளையாட எதுவும் தடையில்லை:நிரூபித்த வீராங்கனையினர்
/
விளையாட எதுவும் தடையில்லை:நிரூபித்த வீராங்கனையினர்
விளையாட எதுவும் தடையில்லை:நிரூபித்த வீராங்கனையினர்
விளையாட எதுவும் தடையில்லை:நிரூபித்த வீராங்கனையினர்
ADDED : மார் 12, 2024 01:32 AM

கோவை;ராமகிருஷ்ணா கல்லுாரியில் நடந்த கிரிக்கெட் போட்டியில் அசத்திய பார்வை குறைபாடு உள்ள வீராங்கனையினர், விளையாட எதுவும் தடையில்லை என்பதை நிரூபித்துக்காட்டினர்.
'கோவை பிட்ச் பர்னர்ஸ் ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன்' சார்பில் ஆண்டுதோறும் கார்ப்பரேட் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. அதில் இருந்து திரட்டப்படும் நிதியை மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் - வீராங்கனையினருக்கு உதவ பயன்படுத்தப்படுகின்றது.
இந்நிலையில், ஆறாம் ஆண்டு போட்டி பிப்., 3ம் தேதி முதல் மார்ச் 10ம் தேதி வரை ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரியில் நடந்தது. இப்போட்டியில் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள் பங்கேற்று போட்டியிட்டன. இதில் இக்னைட்டர்ஸ் அணி முதலிடத்தையும், வெர்ட்டிகல்ஸ் அணி இரண்டாமிடத்தையும் பிடித்தன.
தொடர்ந்து, மாற்றுத்திறன் வீரர் வீராங்கனையினரை ஊக்கப்படுத்தும் விதமாக பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இதில் தமிழகம் மற்றும் கேரளா அணிகள் பங்கேற்றன. இப்போட்டியில் கேரளா அணி வெற்றி பெற்றது. பின்னர், நடந்த பரிசளிப்பு விழாவில், கார்ப்பரேட் அணிகளுக்கான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கம், கோப்பை உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டன.
மேலும், பார்வையற்றோர் கிரிக்கெட் போட்டியில் வென்ற கேரளா அணிக்கு ரூ. 25 ஆயிரம், தமிழக அணிக்கு ரூ. 15 ஆயிரம் ரொக்கம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
பரிசளிப்பு விழாவில், திருப்பூர் எஸ்.டி.ஆர்., கார்ஸ் மணி, கீர்த்திலால் நிர்வாகி பிரபாகரன், கோவை மொபைல்ஸ் உரிமையாளர் களிபகதுல்லா, தன்வந்த்ரி மெடிக்கல்ஸ் நிர்வாகிகள் கோபால், ராஜலட்சுமி, உட்சவா ஹில்ஸ் மார்க்கெட்டிங் மேலாளர் ஜேம்ஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

