ADDED : பிப் 11, 2026 09:53 AM
அ நிறம் | அளவு
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, அரசு மேல்நிலைப் பள்ளியில் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தினம் குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.
கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில், கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தினமான நேற்று, ஆசிரியர்கள் மாணவர்கள் என, அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
மேலும், கொத்தடிமை தொழிலாளர் குறித்த விழிப்புணர்வுகள் மற்றும் கொத்தடிமை முறையில் தொழிலாளர்களை வேலைக்கு வைத்தால் கிடைக்கப்பெறும் சட்டபூர்வமான தண்டனைகள் குறித்து மாணவர்களிடையே எடுத்துரைக்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் தேன்மொழி, ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
