ADDED : நவ 06, 2024 11:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார் ; பள்ளபாளையம் கிளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை சார்பில் ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டது. பள்ளபாளையம் விவேகானந்த கல்வி நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஊழல் எதிர்ப்பு என்ற தலைப்பில் மாணவ, மாணவர்கள் பங்கேற்ற ஓவிய போட்டி நடந்தது.
தொடர்ந்து, பள்ளி இயக்குனர் சுந்தரநாதன் தலைமையில் பரிசளிப்பு விழா நடந்தது. வங்கி கிளை மேலாளர் ராஜ பிரசாத், முதல்வர் வனிதா மணி ஆகியோர், ஓவிய போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளித்து பேசினர். பின், மாணவ, மாணவிகள் உட்பட அனைவரும் ஊழல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர்.