தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஜவுளி மதிப்புச் சங்கிலிக்கு பி.எல்.ஐ.திட்டம்: சிஸ்பா

 ஜவுளி மதிப்புச் சங்கிலிக்கு பி.எல்.ஐ.திட்டம்: சிஸ்பா

 ஜவுளி மதிப்புச் சங்கிலிக்கு பி.எல்.ஐ.திட்டம்: சிஸ்பா


ADDED : பிப் 05, 2026 05:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 05, 2026 05:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: ஜவுளி மதிப்புச் சங்கிலிக்கு கூடுதல் ஆதரவு வழங்க வேண்டும் என, 'சிஸ்பா' மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.

தென்னிந்திய நூற்பாலைகள் சங்க தலைவர் அருண் கார்த்திக் அறிக்கை:

மத்திய பட்ஜெட்டில், ஜவுளித் துறைக்கு ஊக்கமளிக்கும் திட்டங்கள் வரவேற்கத்தக்கவை. அதேசமயம், நூற்பாலைத் துறைக்கு சில கூடுதல் திட்டங்கள் தேவை.

பருத்திப் பஞ்சு மீதான 11 சதவீத இறக்குமதி வரிக்கு விலக்கு அளிக்கும் காலம் நீட்டிக்கப்பட வேண்டும். மூலதன இயந்திரங்கள் மற்றும் ரசாயனங்கள் மீதான வரிகளை மேலும் சீரமைப்பது உற்பத்திச் செலவைக் குறைத்து போட்டித் திறனை உயர்த்தும்.

ஜவுளி மதிப்புச் சங்கிலிக்கு உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டம் (பி.எல்.ஐ.,) அறிவிக்கப்பட வேண்டு ம். பருத்தி சுத்திகரிப்பு (ஜின்னிங்), நூற்பாலை நவீன மயமாக்கல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான பி.எல்.ஐ., திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.

பசுமை தொழில்நுட்பம், கழிவு நீர் சுத்திகரிப்பு அமைப்புகள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாடு, ஆற்றல் திறன் மேம்பாட்டு இயந்திரங்களுக்கு தனிப்பட்ட நிதி ஊக்கங்கள் வழங்கப்பட வேண்டும்.

நூற்பாலைகளுக்கான ஏற்றுமதிக் கடன், அபாயக் குறைப்புக் கருவிகள் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் செலவு குறைப்பு நடவடிக்கைகள் அவசியம். தொழில்துறை 4.0, ஆட்டோமோடிவ், டிஜிட்டல் மாற்றத்தை ஊக்குவிக்கும் தனிப்பட்ட நிதி உருவாக்கப்பட வேண்டும். நூற்பாலைகளுக்கும், ஜவுளி மதிப்புச் சங்கிலி ஒருங்கிணைப்புக்கும் கூடுதல் ஆதரவு வழங்கப்பட்டால், துணி நூல் துறை வேலைவாய்ப்பு, ஏற்றுமதி மற்றும் தேசிய பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பை வழங்கும்.

இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us