ADDED : அக் 07, 2024 12:44 AM

அ நிறம் | அளவு
கருமத்தம்பட்டி : சூலுார் பிரகதி சேவா அறக்கட்டளை தொண்டர்கள் ஆண்டு தோறும், ஒரு கிராமத்தை தேர்வு செய்து, அங்கு உழவாரப்பணி செய்வது வழக்கம். இந்தாண்டு, கோதபாளையம் கிராமத்தில், பள்ளி, கோவில், ரேஷன் கடை, சமுதாயக் கூடம் ஆகிய இடங்களில் துாய்மை பணி மேற்கொண்டனர்.
சேவா பாரதி, சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்கம், வேலவன் காவடி குழு, கோதபாளையம் இளைஞர் நற்பணி மன்றம் ஆகிய அமைப்புகளை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் துாய்மை பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.
