sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பிளஸ் 1 விடைத்தாள்கள் திருத்தும் பணி துவக்கம்

பிளஸ் 1 விடைத்தாள்கள் திருத்தும் பணி துவக்கம்

பிளஸ் 1 விடைத்தாள்கள் திருத்தும் பணி துவக்கம்


ADDED : ஏப் 14, 2025 05:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 14, 2025 05:33 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மார்ச், 5ம் தேதி, பிளஸ் 1 பொதுத்தேர்வு துவங்கியது. மாவட்டத்தில், 94 மையங்களில், 26 ஆயிரத்து, 654 மாணவ, மாணவியர் தேர்வெழுதினர். கடந்த மார்ச், 27ம் தேதியுடன் தேர்வுகள் நிறைவடைந்தது. ஒவ்வொரு தேர்வு முடிந்ததும், முதன்மை கண்காணிப்பாளர்கள், போலீஸ் பாதுகாப்புடன் விடைத்தாள்களை திருத்தும் மையங்களுக்கு எடுத்துச்சென்றனர்.

திருப்பூர் கல்வி மாவட்டத்தில் கூலிபாளையம், விகாஸ் வித்யாலயா பள்ளி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தாராபுரம் கல்வி மாவட்டத்தில் பொன்னு மெட்ரிக் பள்ளி ஆகிய இரண்டு இடங்களில் விடைத்தாள் திருத்தும் மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

நேற்றுமுன்தினம் தேர்வுத்துறையின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, விடைத்தாள் திருத்தும் பணிகள் துவங்கின. முதன்மை தேர்வர், கூர்ந்தாய்வாளர் பணியை தொடர்ந்து, விடைத்தாள் திருத்தும் முதுகலை ஆசிரியர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை மேற்கொண்டனர்.

முன்னதாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார், மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) காளிமுத்து விடைத்தாள் திருத்தும் மையங்களில் பணிகள் குறித்து ஆய்வு செய்தனர். கடந்த 4ம் தேதி பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியது. வரும், 17ம் தேதியுடன் இப்பணி நிறைவு பெறுகிறது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே, 9 மற்றும் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வரும் மே, 19ம் தேதி வெளியாகின்றன.

- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us