sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பிளஸ் 1 தேர்வு; வேதியியல், கணக்குப்பதிவியல் ஈஸி

/

பிளஸ் 1 தேர்வு; வேதியியல், கணக்குப்பதிவியல் ஈஸி

பிளஸ் 1 தேர்வு; வேதியியல், கணக்குப்பதிவியல் ஈஸி

பிளஸ் 1 தேர்வு; வேதியியல், கணக்குப்பதிவியல் ஈஸி


ADDED : மார் 27, 2025 11:49 PM

Google News

ADDED : மார் 27, 2025 11:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிளஸ் 1 வேதியியல் மற்றும் கணக்குப்பதிவியல் பொதுத்தேர்வுகள் எளிதாக இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பிளஸ் 1 மாணவர்கள், நேற்று வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் பாடத்திற்கான பொதுத்தேர்வை எதிர்கொண்டனர். மொத்தம், 38 மையங்களில் பொதுத்தேர்வு நடந்தது.

தேர்வு குறித்து, விஸ்வதீப்தி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் கருத்து:

ஹர்சினி: வேதியியல் தேர்வில், கட்டாய வினாக்கள் பகுதியில் இருந்து, வேதி சமன்பாடு வினாக்கள் மற்றும் கணக்குகள் இடம்பெற்றிருந்தன. அதேபோல, தீர்வு காணும் கணக்குகளும் கேட்கப்பட்டிருந்தது. ஐந்து மதிப்பெண் வினாக்கள் கடினமாக இருந்தது. ஆசிரியர்களின் தொடர் பயிற்சி காரணமாக, அனைத்து வினாக்களுக்கும் பதில் எழுதியுள்ளேன்.

நந்தகிேஷார்: வேதியியலில், ஒரு மதிப்பெண் மற்றும் இரண்டு மதிப்பெண் வினாக்கள் மிகவும் எளிதாக இருந்தன. ஐந்து மதிப்பெண் வினாக்கள் சற்று சவாலாக இருந்தது. பயிற்சி பெற்ற வினாக்களாக இருந்ததால், அனைத்து வினாக்களுக்கும் நல்ல முறையில் பதில் எழுதியுள்ளதால், அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் என, எதிர்பார்க்கிறேன்.

ஆல்மாஸ்சக்கியா: கணக்குப்பதிவியல் தேர்வில், ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் சற்று கடினமாக இருந்தன. தீவிர பயிற்சி மேற்கொண்டிருந்ததால், அனைத்து வினாக்களுக்கும் உரிய நேரத்திற்குள் பதில் எழுத முடிந்தது. நல்ல மதிப்பெண் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.

ஹரிஷ்: கணக்குப்பதிவியல் பாடத்தில் ஐந்து மதிப்பெண் வினாக்களும், நெடுவினாக்களும் கடினமாக இருந்தது. ஆசிரியர் வாயிலாக தொடர்ந்து திருப்புதல் தேர்வை எழுதியதால், பொதுத்தேர்வை எளிதாக எழுத முடிந்தது. அனைத்து வினாக்களுக்கும் நல்ல முறையில் பதில் எழுதியுள்ளேன். கூடுதல் மதிப்பெண் கிடைக்கும்.

* கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கருத்து:

நகுலன்: புவியியல் தேர்வு எளிமையாக இருந்தது. ஐந்து மதிப்பெண் வினாக்களில் இரண்டு மட்டும் கடினமாக இருந்தது. மற்ற வினாக்கள் அனைத்தும் எளிமையாக இருந்தது. பயிற்சி பெற்ற வினாக்களாக இருந்ததால், அரை மணி நேரத்துக்கு முன்பாக தேர்வு எழுதி முடித்தேன். நல்ல மதிப்பெண் கிடைக்கும்.

நிஷ்வன் பிரசாத்: வேதியியல் தேர்வில் ஒன்று மற்றும் இரண்டு மதிப்பெண் வினாக்கள் எளிமையாக இருந்தது. ஐந்து மதிப்பெண் வினாக்களில் ஒன்று மட்டும் கடினம். அனைத்து கேள்விகளுக்கும் விடை எழுதி இருக்கிறேன். நிச்சயம், 90 சதவிகிதத்திற்கும் மேல் மதிப்பெண் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.

* வால்பாறை திரு இருதய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கருத்து:

மிதுன்:வேதியியல் தேர்வை பொறுத்தவரை எதிர்பார்த்தது போல, அனைத்து வினாக்களும் எளிமையாக இருந்தன. சில வினாக்கள் பாடப்புத்தகத்தின் உட்பகுதியிலிருந்து கேட்கப்பட்டன. இருப்பினும் தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் அனைத்தும் ஈசியாக இருந்தால், தேர்வை பொறுமையாகவும், தெளிவாகவும் எழுதியுள்ளேன்.

அனந்தகிருஷ்ணா: கணக்குப்பதிவியல் தேர்வை பொறுத்த வரை ரொம்ப ஈசியின்னும் சொல்ல முடியாது, கஷ்டம்னு சொல்ல முடியாது. ஒன்று, மூன்று மதிப்பெண்களுக்கான வினாக்கள் எளிமையாக இருந்தன. ஐந்து மதிப்பெண்கள் வினாக்களில் ஒன்று மட்டும் கடினமாக இருந்தது. இது வரை நடந்த தேர்வில் இந்த தேர்வு சற்று கடினமாக தான் இருந்தது. யோசித்து பதிலளித்துள்ளேன். அதிக மதிப்பெண் கிடைக்கும்.

* உடுமலை ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கருத்து:

நித்தின் ஆதித்யா: இதற்கு முன்பு நடந்த பொதுத்தேர்வுகள் கடினமாக இல்லாவிட்டாலும், ஓரளவு எளிமையாக இருந்தது. வேதியியல் தேர்வும் எளிமையாக இருந்தது. ஐந்து மதிப்பெண் மற்றும் ஒரு மதிப்பெண் பகுதி அனைத்தும் வினாக்கள் நேரடியாக கேட்கப்பட்டதால், நன்றாக எழுத முடிந்தது. மூன்று மதிப்பெண் வினாவில் கட்டாய வினாக்கள் சிறிது கடினமாக கேட்கப்பட்டன.

யோகேஷ்பிரணவ்: வேதியியல் பாடத்தேர்வு எளிமையாக இருந்தது. மூன்று மதிப்பெண் பகுதி வினாக்கள் குழப்பும் வகையில் வந்திருந்தன. ஒரு மதிப்பெண் பகுதி வினாக்கள், பள்ளியில் அடிக்கடி பயிற்சி எடுத்ததால் சுலபமாக இருந்தது. நெடுவினாக்களும் திருப்புதல் தேர்வுகளில் கேட்கப்பட்டவை அதிகமாக வந்திருந்தன.

தர்ஷன்: கணக்குப்பதிவியல் தேர்வு எளிதாக இருந்தது. இறுதி தேர்வு என்பதால் பதட்டத்துடன் இருந்தோம். ஆனால் வினாக்கள் அனைத்தும் எதிர்பார்த்த வகையில் இருந்தன. மூன்று மதிப்பெண் பகுதியில் வினாக்கள் கடினமாக இருந்தன. பயிற்சி பெற்ற வினாக்களாக இருந்ததால், எளிதாக பதிலளித்தேன். அதிக மதிப்பெண் கிடைக்கும்

- நிருபர் குழு -.






      Dinamalar
      Follow us