sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பிளஸ் 1 தமிழ் பாடத்தேர்வு எளிது; மாணவர்கள் மகிழ்ச்சி

/

பிளஸ் 1 தமிழ் பாடத்தேர்வு எளிது; மாணவர்கள் மகிழ்ச்சி

பிளஸ் 1 தமிழ் பாடத்தேர்வு எளிது; மாணவர்கள் மகிழ்ச்சி

பிளஸ் 1 தமிழ் பாடத்தேர்வு எளிது; மாணவர்கள் மகிழ்ச்சி


ADDED : மார் 05, 2024 12:00 AM

Google News

ADDED : மார் 05, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நிருபர் குழு -

'தமிழ் பாடத்தேர்வு மிக எளிமையாக இருந்தது; தேர்வை மகிழ்ச்சியாக எழுதியுள்ளோம்,' என, பிளஸ் 1 மாணவர்கள் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 37 மையங்களில் பிளஸ் 1 பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. தேர்வு நேரத்துக்கு முன்னதாக வந்த மாணவ, மாணவியர், பள்ளி வளாகத்தில் கூட்டு வழிபாடு செய்தனர்.

முதல் நாளான நேற்று, தமிழ்பாடத்துக்கான தேர்வு நடந்தது. காலை, 10:00 மணிக்கு வினாத்தாளும், 10:15 மணிக்கு விடைத்தாளும் வழங்கப்பட்டது. தேர்வு எழுத, மாணவர்கள், 3,713, மாணவியர், 4,255 என மொத்தம், 7,968 பேர் விண்ணப்பித்தனர். அதில், 3,657 மாணவர்கள், 4,212 மாணவியர் என, மொத்தம், 7,869 பேர் தேர்வு எழுதினர்.

மாணவர்கள், 55, மாணவியர், 46 என மொத்தம், 101 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்வு முறையாக நடக்கிறதா என, கல்வி மாவட்ட அலுவலர் கேசவகுமார், தேர்வு மையங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி யுகாஷினி: ஒரு மதிப்பெண் ஒன்றும், மூன்று மதிப்பெண் வினா ஒன்றும் புத்தகத்தில் இருந்து கேட்கப்பட்டு இருந்தாலும் எளிமையாக இருந்தது. திருக்குறள் பகுதியில் இருந்து நெடுவினா கேட்கப்பட்டு இருந்தது. அதுவும் எளிமையாக இருந்தது. அனைத்து வினாக்களும் எளிமையாக இருந்ததால் மகிழ்ச்சியாக தேர்வு எழுதினேன்.

தக் ஷதா: ஒரு மதிப்பெண் வினாக்கள், குழப்பமாக இருப்பது போன்று இருந்தாலும்; எளிமையாக இருந்தது. அனைத்தும் தெரிந்த வினாக்களாக இருந்ததால், மன மகிழ்ச்சியோடு தேர்வு எழுதியுள்ளேன்.முழு மதிப்பெண் கிடைக்கும் என, எதிர்பார்க்கிறேன்.

லதாங்கி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் அபிநவ்: ஒரு மதிப்பெண் வினாக்கள் எளிமையாக இருந்தது. புத்தகத்தின் உள் பகுதியில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டு இருந்தன. நான்கு மதிப்பெண் வினாக்களில் இரண்டும், நெடுவினாவில் ஒன்றும், புத்தக உள்வினாவாக கேட்கப்பட்டு இருந்தன. தமிழ் பாடத்தேர்வு எளிமையாக இருந்தது.

ேஷாபிகா:அனைத்து வினாக்களுக்கும் எளிமையாக விடையளிக்கும் விதமாக, வினாத்தாள் அமைந்து இருந்தது. ஒரு மதிப்பெண், நெடுவினா என, அனைத்து பகுதி வினாக்களுக்கும் திருப்தியாக விடை எழுதியுள்ளேன். முதல் தேர்வையே மன திருப்தியுடன் எழுதியது நிறைவாக உள்ளது.

கவுசிகா:அனைத்து வினாக்களும் சுலபமாக இருந்தன. காலம் தாழ்த்தாமல் அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க முடிந்தது. புத்தக உள் வினாக்கள் சில கேட்கப்பட்டு இருந்தாலும் உடனடியாக விடை தெரிந்து எழுதும் வகையிலேயே அமைந்திருந்தது.

உடுமலை


உடுமலையில், பிளஸ் 1 தமிழ்பாடத்தேர்வு, 18 மையங்களில் நேற்று நடந்தது. 4,024 பேர் தேர்வு எழுதினர். வழக்கமான முறையில் ஐந்து வழிதடங்களில் வினாத்தாள்கள் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. கல்வித்துறை அலுவலர்கள் தேர்வு மையங்களை ஆய்வுசெய்தனர்.

தேர்வு குறித்து, உடுமலை பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் கூறியதாவது:

மோகனா: தமிழ் தேர்வு எளிமையாக இருக்கும் என நினைத்தோம். ஆனால் ஏமாற்றம் தான். ஒரு மதிப்பெண் வினாக்கள் முழுவதும் எங்களை குழப்பும் வகையில்தான் இருந்தது.இதனால், யோசித்து விடையளிக்க வேண்டியிருந்தது. குழப்பமான வினாக்களால் சிரமமாக இருந்தது.

மதுபாலா: தமிழ்த்தேர்வில் நான்கு மற்றும் ஆறு மதிப்பெண் பகுதியில் சில வினாக்கள் நேரடியாக கேட்கப்படவில்லை. யோசித்து பதில் எழுத வேண்டி இருந்தது. இதனால் கூடுதல் நேரமும் தேவைப்பட்டது. முதல் தேர்வே கொஞ்சம் கடினம் தான்.

கலைவாணி: தேர்வுக்கான வினாக்களை புரிந்து படித்தால் மட்டுமே விடை எழுத முடியும். மிக குறைவான பயிற்சி வினாக்கள்தான் கேட்கப்பட்டிருந்தன. இதனால், ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண் வினாக்களுக்கும் அதிக நேரம் செலவிட வேண்டியிருந்தது.

ரஞ்சனா: தமிழ்த்தேர்வில், வினாத்தாள் கடினமாக வந்துள்ளதால் மற்ற தேர்வுகள் குறித்தும் அச்சம் எழுகிறது. வினாக்களை புரிந்துகொள்வதற்கே காலதாமதம் ஏற்பட்டது. அடுத்து வரும் தேர்வுகள் எளிமையாக இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.

மதுஸ்ரீ: பயிற்சி செய்த வினாக்களில் இருந்து சில வினாக்களே கேட்கப்பட்டிருந்தது. பாடங்களை புரிந்து படித்திருந்தால் மட்டுமே விடை எழுத முடியும். ஆறு மதிப்பெண் பகுதியிலும் இரண்டு வினாக்கள் கடினமாகதான் இருந்தது.






      Dinamalar
      Follow us