sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பிளஸ் 2; வேதியியல், கணக்குப்பதிவியல் தேர்வு ஈஸி; மாணவர்கள் மகிழ்ச்சி

/

பிளஸ் 2; வேதியியல், கணக்குப்பதிவியல் தேர்வு ஈஸி; மாணவர்கள் மகிழ்ச்சி

பிளஸ் 2; வேதியியல், கணக்குப்பதிவியல் தேர்வு ஈஸி; மாணவர்கள் மகிழ்ச்சி

பிளஸ் 2; வேதியியல், கணக்குப்பதிவியல் தேர்வு ஈஸி; மாணவர்கள் மகிழ்ச்சி


ADDED : மார் 21, 2025 10:18 PM

Google News

ADDED : மார் 21, 2025 10:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நிருபர் குழு -

பிளஸ் 2, வேதியியல், கணக்குப்பதிவியல் வினாத்தாள் மிக எளிமையாக இருந்தது, என மாணவர்கள் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பிளஸ்2 பொதுத்தேர்வுகள் கடந்த, 3ம் தேதி துவங்கியது. அதில், நேற்று வேதியியல் மற்றும் கணக்குப்பதிவியல் தேர்வு நடைபெற்றது.

* தேர்வு குறித்து, ஜமீன் ஊத்துக்குளி செண்பகம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் கருத்து வருமாறு:

தர்ஷினி: கணக்குப்பதிவியல் வினாத்தாள் எளிதாக இருந்தது. அனைத்து வினாக்களும் விடையளிக்கும் வகையில் இருந்ததால், மகிழ்ச்சியுடன் தேர்வை எழுதினேன். அவசர கதியில் எழுதாமல், பொறுமையாக எழுதியதால் சதம் அடிப்பதற்கான வாய்ப்புள்ளது.

நஸ்பியா: வேதியியல் வினாத்தாள் மிக எளிதாக இருந்தது. மூன்று மதிப்பெண் வினாக்கள், புத்தக பயிற்சிகள் மட்டுமின்றி, பாடங்களில் உள்ளிருந்தும் கேட்கப்பட்டு இருந்தன.கட்டாய மதிப்பெண் வினாக்களும் எளிமையாக இருந்தன. அனைத்து பகுதியிலும் வினாக்கள் எளிமையாக இருந்ததால், நல்ல முறையில் தேர்வு எழுதியுள்ளேன்.முழு மதிப்பெண் கிடைக்கும்.

* வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கருத்து:

தர்ஷினி: வேதியியல் தேர்வு எதிர்பார்த்தது போலவே ஈசியாக இருந்தது. பெரும்பாலான வினாக்கள் பாடத்தின் 'புக் பேக்' வினாக்கள் அதிகமாக கேட்டப்பட்டன. ஐந்து மதிப்பெண்களுக்கான வினாக்கள் அனைத்துமே எளிதாக இருந்தன. கட்டாய வினாக்களும் மிக எளிதாக இருந்தன. தேர்வை பொறுத்த வரை நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.

வைஷ்ணவி: வேதியியல் தேர்வை பொறுத்த வரை, அனைத்து வினாக்களும் எளிமையாக இருந்தன. மூன்று மதிப்பெண் வினாக்களில் சில வினாக்கள் மட்டும் கடினமாக இருந்தன. பிற வினாக்கள் எளிமையாக கேட்கப்பட்டதால், தேர்வை தெளிவாக எழுதியுள்ளேன். ஆசிரியர்கள் பயிற்சி அளித்த பகுதிகளில் இருந்து அதிக அளவில் வினாக்கள் கேட்கப்பட்டதால், தேர்வை நல்ல முறையில் எழுதியுள்ளேன்.

* உடுமலை ஆர்.கே.ஆர்., குருவித்யா பள்ளி மாணவர்கள் கருத்து:

மைநிஷாந்த்: வேதியியல் தேர்வு மிகவும் எளிமையாக இருந்தது. மற்ற தேர்வுகள் ஓரளவு கடினமாக இருந்ததால், இந்த பாடத்தேர்வு குறித்து அச்சத்தில் இருந்தோம். ஆனால் எதிர்பார்த்த வினாக்கள் அதிகளவில் கேட்கப்பட்டது திருப்தியாக உள்ளது.

ேஹமா: வேதியியல் தேர்வில், ஒரு மதிப்பெண் பகுதியில், மூன்று மதிப்பெண் பகுதியில், சில வினாக்கள் பாடப்பகுதியின் உள்ளிருந்து கேட்கப்பட்டன. ஆனால், பள்ளியில் திருப்புதல் தேர்வுகளில் அத்தகைய வினாக்களை எதிர்கொண்டுள்ளதால், இந்த தேர்வில் எளிதில் விடைகளை எழுத முடிந்தது.

ஹர்ஷவர்தன்: கணக்குப்பதிவியல் தேர்வு மிகவும் எளிமையாக இருந்தது. ஒரு மதிப்பெண் பகுதியில் வினாக்கள் குழப்பும் வகையில் இருந்தன. பள்ளியில் ஒரு மதிப்பெண் பகுதிகளுக்கென நன்றாக பயிற்சி எடுத்திருந்ததால் தேர்வு நேரத்தில் குழப்பிக்கொள்ளாமல் தெளிவாக விடைகளை எழுத முடிந்தது.

ரித்திகா: கணக்குப்பதிவியல் பாடத்தேர்வில், வினாக்கள் எதிர்பார்த்த வகையில் கேட்கப்பட்டன. முந்தைய திருப்புதல் தேர்வு, காலாண்டு, அரையாண்டு தேர்வு வினாத்தாள்களில் இருந்தும் வினாக்கள் வந்திருந்தன. இதனால் மிகவும் சுலபமாக விடை எழுதினோம். வினாக்கள் எளிமையாக இருந்ததால் பதட்டமில்லாமல் தேர்வு எழுத முடிந்தது.






      Dinamalar
      Follow us