sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 09, 2026 ,மார்கழி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பிளஸ் 2 தேர்வு: இயற்பியல் கடினம், பொருளியல் எளிது மாணவ, மாணவியர் கருத்து

/

பிளஸ் 2 தேர்வு: இயற்பியல் கடினம், பொருளியல் எளிது மாணவ, மாணவியர் கருத்து

பிளஸ் 2 தேர்வு: இயற்பியல் கடினம், பொருளியல் எளிது மாணவ, மாணவியர் கருத்து

பிளஸ் 2 தேர்வு: இயற்பியல் கடினம், பொருளியல் எளிது மாணவ, மாணவியர் கருத்து


ADDED : மார் 15, 2024 08:18 PM

Google News

ADDED : மார் 15, 2024 08:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி;பிளஸ் 2 பொதுத்தேர்வில், இயற்பியல் பாடம் கடினமாகவும், பொருளியல் பாடம் எளிதாகவும் இருந்ததாக மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, 37 மையங்களில் நடந்தது. நேற்று, பொருளியல், இயற்பியல் மற்றும் வேலைவாய்ப்பு திறன் பாடங்களுக்கான தேர்வு நடந்தது.

பொருளியல் பாடத் தேர்வை எழுத, 3,611 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதில் மாணவர்கள், 1,623 மாணவியர், 1,932 என, மொத்தம், 3,555 பேர் எழுதினர்; 56 பேர் தேர்வு எழுதவில்லை.

வேலைவாய்ப்பு திறன் தேர்வு எழுத, 684 பேர் விண்ணப்பித்தனர். அதில், 494 மாணவர்கள், 178 மாணவியர் என மொத்தம், 672 பேர் தேர்வு எழுதினர்; 12 பேர் தேர்வு எழுதவில்லை.

இயற்பியல் பாடத் தேர்வுக்கு, 4,008 பேர் எழுத விண்ணப்பித்தனர். அதில், 1,688 மாணவர்கள், 2,264 மாணவியர் என மொத்தம், 3,952 பேர் தேர்வு எழுதினர்; 56 பேர் தேர்வெழுதவில்லை.

இயற்பியல் தேர்வு குறித்து ஆசிரியர்கள் கூறுகையில், 'மாணவர்கள் பலரும் வினாத்தாளை முழுமையாக படித்ததுமே முகம் மாறிவிட்டனர். சில பேர் அழுகையுடன்தான் தேர்வு எழுதினர். மூன்று மதிப்பெண் மற்றும் ஐந்து மதிப்பெண் பகுதிகள் எதிர்பார்த்ததை விட கடினமாக இருந்ததால், சதம் எடுக்கும் நோக்கத்தில் இருந்த பலருக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது,' என்றனர்.

பொள்ளாச்சி மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி தீபிகா ஸ்ரீ: இயற்பியல் பாடத்தில், இரண்டு மதிப்பெண் வினாக்கள் எளிமையாக இருந்தது. மற்ற பகுதிகளில் கொஞ்சம் கடினமாக இருந்தாலும், தெரிந்த வினாக்களே வந்ததால், நல்ல முறையில் தேர்வு எழுதியுள்ளேன்.எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும்.

பூ தர்ஷனா:இயற்பியல் தேர்வில், மூன்று மதிப்பெண் வினாக்கள் மட்டும் கடினமாக இருந்தது. மற்றவை தெரிந்த வினாக்களாக இருந்தன. சில பகுதி கடினமாக இருந்தாலும், பயிற்சி பெற்ற வினாக்களாக இருந்ததால், தேர்வை சிறப்பாக எழுதியுள்ளேன்.முழு மதிப்பெண் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

பூஜா: பொருளியல்பாடத்தேர்வு எதிர்பார்த்ததை விட மிகவும் எளிமையாக இருந்தது. அனைத்து வகை வினாக்களும் எளிமையாக கேட்கப்பட்டு இருந்ததால், மகிழ்ச்சியுடன் தேர்வு எழுதியுள்ளேன். அதனால், பொருளியலில் முழு மதிப்பெண் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.

பொள்ளாச்சி லதாங்கி வித்யா மந்திர் பள்ளி மாணவர் ஆமினா ஜூல்பி:இயற்பியல் பாடத்தேர்வில், ஒரு மதிப்பெண் பகுதியில், சில வினாக்கள் கடினமாக இருந்தாலும் விடையளிக்கும் விதமாக இருந்தது. மூன்று மதிப்பெண் வினாக்கள் சற்று கடினமாக இருந்தது. புத்தக புற வினாக்களும், உள் வினாக்களும் சமமாக கேட்கப்பட்டு இருந்தன. மொத்தத்தில் எளிமையாக இருந்தது.

லித்திகா: இயற்பியலில் மூன்று மதிப்பெண்கள் வினாக்களில் கேட்கப்பட்ட சில வினாக்கள் கடினமாக இருந்தன. ஐந்து மதிப்பெண் வினாக்கள் மிக எளிமையாக இருந்தது. பயிற்சி பெற்ற வினாக்களாக இருந்ததால், சிறப்பாக தேர்வு எழுதியுள்ளேன். முழு மதிப்பெண் கிடைக்கும்.

ஹரிபிரியா:இயற்பியலில், மூன்று மதிப்பெண் வினாக்கள் தேர்ந்தெடுப்பதற்கு சற்று கடினமாக இருந்தது. மற்ற வினாக்கள் எளிதாக பதில் அளிக்கும் விதமாக அமைந்திருந்தது. எளிமையான வினாத்தாளாக இருந்தது.அதனால், பதற்றமின்றி தேர்வு எழுதியுள்ளேன். எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும்.

தனுஷ்: பொருளியல் பாடத்தேர்வில், ஒரு மதிப்பெண் வினாக்கள் எளிமையாக இருந்தது. மூன்று மதிப்பெண் வினாக்களில், கட்டாய வினா, புத்தக உள்வினாவாக கேட்கப்பட்டு இருந்தது. ஆனாலும், பதிலளிக்கும் விதத்தில் இருந்தது. வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்ததால், முழு மதிப்பெண் கிடைக்கும்.

சரண்யாஸ்ரீ: பொருளியலில், ஒரு மதிப்பெண் பகுதியில், சில வினாக்கள் புத்தக உள் வினாவும் கேட்கப்பட்டு இருந்தது. ஆனால், சுலபமாக பதிலளிக்கும் விதத்தில் அமைந்தது. மற்ற அனைத்து வினாக்களும் எளிமையாக இருந்தது. தேர்வை பதற்றமின்றி எழுதியுள்ளேன். அதிக மதிப்பெண் கிடைக்கும்.

உடுமலை


உடுமலையில், 18 மையங்களில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடக்கிறது. நேற்று அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு இயற்பியல் தேர்வும், கலைப்பிரிவினருக்கு பொருளியல் தேர்வும் நடந்தது. தேர்வு குறித்து, உடுமலை ஆர்.ஜி.எம்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மொகமதுயாசீன்: வேதியியல் தேர்வு ஓரளவு கடினமாக இருந்ததால், இயற்பியல் தேர்வு எளிமையாக இருக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் இந்த தேர்வும் கடினமாகவே இருந்தது. ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண் வினாக்கள் எழுதிவிடலாம். மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்களை புத்தகம் முழுவதும், நன்றாக உள்வாங்கி படித்திருந்தால் மட்டுமே விடை எழுத முடியும்.

சபரிஉமேஷ்: இயற்பியல் பாடத்தேர்வில் பல வினாக்கள் பயிற்சி செய்யாதவையாகவே வந்தன. தேர்ச்சி பெறுவது எளிமையாக இருப்பினும், சதம் எடுப்பது கடினம்தான். முந்தைய தேர்வு வினாக்கள் கூட அதிகம் கேட்கப்படவில்லை. பாடப்பகுதியின் உள்ளிருந்து வினாக்கள் வந்ததால் விடை எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டது.

ராஜசுதா: இயற்பியல் ஒரு மதிப்பெண் வினாக்கள் பயிற்சி வினாக்களாக இருந்ததால், அனைத்தும் எளிமையாக இருக்கும் என பார்த்தோம். ஆனால் 3 மதிப்பெண் வினாக்களில் அதிகமாக கணக்குகள், அதிலும் அதிகளவில் பயிற்சி செய்யாதவையாக கேட்கப்பட்டன. மூன்று மதிப்பெண் பகுதியில், அதிகப்பட்சமாக எளிமையாக விடை எழுதும் வகையில் இரண்டே வினாக்கள்தான் இருந்தன. 5 மதிப்பெண் பிரிவிலும், இரண்டு வினாக்கள் எதிர்பார்க்காதவையாக இருந்தன.

நவீன்விக்னேஷ்: ஒன்று, இரண்டு மதிப்பெண் வினாப்பகுதிகள் எளிமையாக இருந்தன. மூன்று மதிப்பெண் பகுதி இரண்டு அல்லது மூன்று வினாக்கள் மட்டுமே, எல்லோரும் விடை எழுத முடியும் வகையில் இருந்தன. மற்ற அனைத்து வினாக்களும், பாடப்பகுதிகளின் உள்ளிருந்த பயிற்சி செய்யாத கணக்குகளாகவும், எதிர்பார்க்காத வினாக்களாகவும் இருந்தன. இதனால் சதம் எடுப்பது சவால் தான்.

பிரவீணா: பொருளியல் தேர்வு எளிமையாக இருந்தது. பயிற்சி செய்யாத வினாக்களாக இருப்பினும், விடை எழுத முடிந்தது. இதனால், பொருளியலில் அதிக அளவில் மாணவர்கள் சதம் பெறுவதற்கும் வாய்ப்புள்ளது.

ஹரிணிமகாலட்சுமி: பொருளியல் தேர்வில் ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண், நெடுவினா என அனைத்து பகுதிகளிலும் பாடப்பகுதிகளின் உள்ளிருந்து வினாக்கள் வந்திருந்தன. இருப்பினும், கடினமாக தெரியவில்லை. அனைத்து மாணவர்களுக்கும் எளிமையாக இருந்ததால், தேர்வை பதற்றமின்றி எழுதினேன்.

கோமல்: பொருளியல் தேர்வில், எதிர்பார்த்த வினாக்கள் அதிகம் வந்திருந்தன. பள்ளியில் பயிற்சி அளித்ததால், சில குழப்பமான வினாக்களுக்கும் சுலபமாக விடை எழுத முடிந்தது. சதம் பெறுவதும் ஈஸி தான்.






      Dinamalar
      Follow us