தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை துவக்கம்: பள்ளிகளில் ஏற்பாடுகள் தீவிரம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை துவக்கம்: பள்ளிகளில் ஏற்பாடுகள் தீவிரம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை துவக்கம்: பள்ளிகளில் ஏற்பாடுகள் தீவிரம்


ADDED : பிப் 28, 2024 09:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2024 09:21 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிளஸ்2 பொதுத் தேர்வுகள் வரும், 1ம் தேதி துவங்கி 22ம் தேதி வரையும்; பிளஸ் 1 பொதுத்தேர்வு வரும், 4ம் தேதி துவங்கி, 25ம் தேதி வரை நடக்கிறது.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பொள்ளாச்சி தெற்கு, வடக்கு, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை, சுல்தான்பேட்டை, மதுக்கரை உள்ளிட்ட ஏழு ஒன்றியங்களில் மொத்தம், 97 பள்ளிகள் உள்ளன. அதில், பிளஸ் 2 பொதுத்தேர்வை, 3,345 மாணவர்கள், 4,045 மாணவியர் என மொத்தம், 7,390 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

பிளஸ் 1 பொதுத்தேர்வை, 3,817 மாணவர்கள், 4,329 மாணவியர் என, மொத்தம், 8,146 பேர் எழுதுகின்றனர். இவர்களுக்கானசெய்முறைத்தேர்வுகள் இரண்டு கட்டமாக நடைபெற்றன.

பிளஸ் 2 பொதுத் தேர்வு வரும், 1ம் தேதி துவங்கி, 22ம் தேதி வரையும், பிளஸ் 1 பொதுத்தேர்வு வரும், 4ம் தேதி துவங்கி, 25ம் தேதி வரையும் நடக்கிறது. பொதுத்தேர்வுக்கான ஏற்பாடுகளில் கல்வித்துறை அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

37 மையங்கள்


பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், தனித்தேர்வர் எழுதும் மையம் உள்பட மொத்தம், 37 மையங்களில், பிளஸ் 2 தேர்வுகள் நடத்தப்படுகின்றன. 10 வழித்தடங்கள் உள்ளன. அறை கண்காணிப்பாளர்கள், அலுவலக பணியாளர்கள், வழித்தட அலுவலர்கள், பறக்கும்படை என மொத்தம், 800க்கும் மேற்பட்டோர் தேர்வுப்பணிகளில் ஈடுபட உள்ளனர். இப்பணியில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வினாத்தாள் இருப்பு


பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பொள்ளாச்சி மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியும், கிணத்துக்கடவு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என, மூன்று பள்ளிகள் வினாத்தாள் இருப்பு மையங்களாக தேர்வு செய்யப்பட்டன.

இந்த மையங்களில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வினாத்தாள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அந்த அறைக்கு, 'சீல்' வைக்கப்பட்டுள்ளது.

எண் ஒட்டுதல்


பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வை முன்னிட்டு, கடந்த சில நாட்களாக விடைத்தாள் தைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதை தொடர்ந்து, தேர்வு நடைபெறும் பள்ளிகளில் உள்ள அறைகளில், மாணவர்களின் தேர்வு எண் ஒட்டும் பணி நடைபெற்று வருகின்றன.

மேலும், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய அறிவுரைகளை வழங்குகின்றனர்.

உடுமலை


உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் உள்ளடக்கிய உடுமலை கோட்டத்தில், 18 மையங்களில், 3,683 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வும், 4,087 மாணவர்கள் பிளஸ் 1 தேர்வும் எழுதுகின்றனர்.

தேர்வு மையங்களில் அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. 18 மையங்களிலும், துறை அலுவலர்கள், தேர்வறை கண்காணிப்பாளர்கள் மற்றும் முதன்மைக் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்வு மையங்களில் பாதுகாப்பு மற்றும் அடிப்படை நடவடிக்கைகள் குறித்து, கல்வித்துறை அலுவலர்கள் ஆய்வு நடத்தினர்.

திருப்பூர் மாவட்ட கல்வித்துறையின் சார்பில், பறக்கும்படை மற்றும் நிலையான பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உடுமலை கோட்டத்தில், மையத்துக்கு ஒரு நிலையான பறக்கும்படை அலுவலர் மற்றும் 6 பறக்கும் படை அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலுள்ள, வினாத்தாள் இருப்பு மையத்தில் இருந்து, ஐந்து வழிதடங்களில், வினாத்தாள்கள், காலை, 8:15 மணிக்குள் அந்தந்த மையங்களில் கொண்டு சேர்க்கப்படுகிறது.

வினாத்தாள் கொண்டு செல்ல, வழித்தட அலுவலர்களுடன் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

தாமதம் தவிர்க்க அறிவுறுத்தல்!

பொள்ளாச்சி, உடுமலை அதிகாரிகள் கூறியதாவது: பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பள்ளிகளில், அடிப்படை வசதிகள் போதுமானதாக உள்ளதா என பார்வையிடப்பட்டுள்ளது.தவறுகள் ஏதும் நடைபெறாமல் இருக்க போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கண்காணிப்பு தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.தேர்வு மையங்களில், தேர்வறை கண்காணிப்பாளர்கள் மொபைல்போன்கள் எடுத்துச்செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் காலதாமதமாக வருவதை தவிர்க்க வேண்டும். தேர்வு நேரத்துக்கு முன்பாகவே, அனைவரும் மையத்தில் இருக்கும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



- நிருபர் குழு -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us