தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கணித தேர்வில் சென்டம் எடுப்பது சிரமம் பிளஸ் 2 மாணவர்கள் ஆதங்கம்

 கணித தேர்வில் சென்டம் எடுப்பது சிரமம் பிளஸ் 2 மாணவர்கள் ஆதங்கம்

 கணித தேர்வில் சென்டம் எடுப்பது சிரமம் பிளஸ் 2 மாணவர்கள் ஆதங்கம்


ADDED : மார் 18, 2026 05:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2026 05:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவில்பாளையம்: பிளஸ் 2 கணித தேர்வு கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

சர்க்கார் சாமக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள தேர்வு மையத்தில், கோவில்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, காட்டம்பட்டி தவத்திரு சாந்தலிங்க அடிகளார் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று கணித பாட தேர்வு நடந்தது.

சென்டம் எடுப்பது கடினம் தக்சன்யா, காட்டம்பட்டி.

கணிதத் தேர்வில், 90 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.

ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண், மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இதில் ஒரு சில கேள்விகள் கடினமாக இருந்தன. இதனால் சென்டம் எடுப்பது சிரமம். அரசு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும்.

95 சதவீத மதிப்பெண் பெறலாம் சகி, காட்டம்பட்டி

கணித தேர்வில் பெரும்பாலான கேள்விகள் திருப்புதல் தேர்வில் கேட்கப்பட்டவை தான். மிகவும் எளிதாக இருந்தது, 95 சதவீத மதிப்பெண் பெற முடியும்.

சில கேள்விகள் கடினம் ஹரி பிரவீன், காட்டம்பட்டி.

கணித தேர்வில் மிக எளிதாக தேர்ச்சி பெறலாம். பல கேள்விகள் ஆசிரியர் தெரிவித்த கேள்விகளாக இருந்தன.

சில கேள்விகள் மட்டும் கடினமாக இருந்தன. ஐந்து மதிப்பெண் கேள்விகளில் சில அதிக நேரம் எடுத்துக் கொண்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us