/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிளஸ்1 சேர்க்கை பணிகள் 'விறு விறு' 'மவுஸ்' பிடிக்க மவுசு! கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பு 'சுறுசுறு'
/
பிளஸ்1 சேர்க்கை பணிகள் 'விறு விறு' 'மவுஸ்' பிடிக்க மவுசு! கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பு 'சுறுசுறு'
பிளஸ்1 சேர்க்கை பணிகள் 'விறு விறு' 'மவுஸ்' பிடிக்க மவுசு! கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பு 'சுறுசுறு'
பிளஸ்1 சேர்க்கை பணிகள் 'விறு விறு' 'மவுஸ்' பிடிக்க மவுசு! கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பு 'சுறுசுறு'
ADDED : மே 12, 2024 11:27 AM

கோவை : பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியான சூழலில், பிளஸ்1 மாணவர்கள் சேர்க்கை உடனடியாக அனைத்து பள்ளிகளிலும் துவங்கியது. இந்தாண்டு, கம்ப்யூட்டர் தொடர்பான படிப்புகளில் சேர, பல மாணவ மாணவியர் ஆர்வமுடன் உள்ளனர்.
அறிவியல் மற்றும் கலை பிரிவுகள் இரண்டிலுமே கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேசன் துறையை தேர்வு செய்யவே, 'டாப்' மாணவர்கள் மத்தியில் போட்டி நிலவியது.
பிளஸ்1 சேர்க்கையில், பயாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ், ப்யூர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், வணிகவியல் , வணிக கணிதம், உள்ளிட்ட பாடப்பிரிவுகள் வழங்கப்படுகின்றன.
தனியார் பள்ளிகளை பொறுத்தவரையில், 470 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கே கம்ப்யூட்டர் சயின்ஸ், பயாலஜி பாடப்பிரிவுகள் சேர்க்கை வழங்கப்படுகிறது.
முதல் நாளான நேற்று, தனியார் பள்ளிகளில் மட்டுமின்றி, அரசு பள்ளிகளிலும் கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேசன் துறைக்கு அதிக போட்டி நிலவியது. பயாலஜி பாடப்பிரிவை மருத்துவம் படிக்க வேண்டும் என்று குறிக்கோள் கொண்ட மாணவர்கள் மட்டுமே தேர்வு செய்கின்றனர். இப்பாடப்பிரிவில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
தனியார் பள்ளி முதல்வர் ஒருவர் கூறுகையில், 'முன்பெல்லாம் பயாலஜி பாடத்தை தேர்வு செய்ய அதிக போட்டி இருக்கும். தற்போது, ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் வளர்ச்சியால், பிளஸ்1 சேர்க்கையிலும் அனைவரும், கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேசன் துறையை தேர்வு செய்யவே விரும்புகின்றனர்.
அறிவியல் பாடத்தை காட்டிலும், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், வணிகவியல், வணிக கணிதம் ஆகிய கலை பாடப்பிரிவுகளை தேர்வு செய்யவே பலர் போட்டியிட்டனர். அறிவியல் பிரிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவுக்கு மட்டுமே போட்டி இருந்தது. பயாலஜி பாடத்தில் சேர்வதற்கு நல்ல மதிப்பெண் பெற்ற பல மாணவர்களும் விரும்பவில்லை' என்றார்.