/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இறந்தவர் பெயரில் பி.எம்., கிசான் நிதி கலெக்டர் விடுக்கிறார் கடும் எச்சரிக்கை
/
இறந்தவர் பெயரில் பி.எம்., கிசான் நிதி கலெக்டர் விடுக்கிறார் கடும் எச்சரிக்கை
இறந்தவர் பெயரில் பி.எம்., கிசான் நிதி கலெக்டர் விடுக்கிறார் கடும் எச்சரிக்கை
இறந்தவர் பெயரில் பி.எம்., கிசான் நிதி கலெக்டர் விடுக்கிறார் கடும் எச்சரிக்கை
ADDED : மே 15, 2025 11:21 PM
பொள்ளாச்சி; இறந்த விவசாயிகளின் பெயரில் பி.எம்., கிசான் சம்மன் நிதி பெறுவது கண்டறியப்பட்டால் வாரிசுதாரர்களிடம் இருந்து திரும்ப வசூலிக்கப்படும் என, கோவை கலெக்டர் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக,கோவைகலெக்டர்வெளியிட்டுள்ள அறிக்கை:
பி.எம்., கிசான் திட்டத்தின் கீழ் தகுதியுடைய அனைத்து விவசாயிகளும், விடுபடல் இன்றி பயன்பெறும் வகையில், சிறப்பு முகாம் வரும் 31ம் தேதி நடக்கவுள்ளது.
வேளாண் இணை இயக்குநர் அலுவலகம், வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்கள், அஞ்சலகம், இ-சேவை மையங்களில், இச்சிறப்பு முகாம் நடக்கவுள்ளது.
திட்டத்தின் 20வது தவணை, வரும் ஜூன் மாதம் வழங்கப்படவுள்ளது. எனவே, தகுதியுடைய விவசாயிகள், தங்களின் நிலம் தொடர்பான விவரங்கள், வங்கிக் கணக்குடன் ஆதார் இணைப்பது போன்ற அனைத்து விதமான விவரங்களைச் சமர்ப்பித்து பயன்பெறலாம்.
ஏற்கனவே, 19வது தவணை பெற்ற விவசாயிகளில், 9,419 பேர், நில உடைமை பதிவு மேற்கொள்ளவில்லை. இவ்விவசாயிகள் நில உடைமை பதிவு மேற்கொண்டு, 20வது தவணையை தடையின்றி பெற்றுக் கொள்ளலாம்.
இத்திட்டத்தில் பயன்பெற்று வந்து, இறந்த பயனாளிகளின் விவரத்தைச் சமர்ப்பிக்காமல், இறந்தவரின் பெயரில் தொடர்ந்து, தவணைத் தொகையை பெற்று வருவது ஆய்வில் தெரியவந்தால், அத்தொகை வாரிசுதாரர்களிடம் இருந்து வசூலிக்கப்படும்.
எனவே, இறந்த பயனாளிகளின் வாரிசுதாரர்கள், இறப்புச் சான்றை சமர்ப்பித்து, அவர் பெற்று வரும் நிதியை நிறுத்த வேண்டும். வாரிசுதாரர்கள் இத்திட்டத்தில் பயன்பெற, தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கவும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.