/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிரதமர் மோடி பிறந்த நாள்; பா.ஜ.வினர் கொண்டாட்டம்
/
பிரதமர் மோடி பிறந்த நாள்; பா.ஜ.வினர் கொண்டாட்டம்
ADDED : செப் 18, 2025 09:50 PM
கிணத்துக்கடவு; பா.ஜ., சார்பில், பிரதமர் மோடி பிறந்தநாள் விழா, கிணத்துக்கடவு சுற்று பகுதிகளில் கொண்டாடப்பட்டது. சிங்கையன்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்ள அங்கன்வாடி குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள், இனிப்புகள் வழங்கப்பட்டது. கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனில், ரயில் பயணியருக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், ஏழை எளிய மக்களுக்கு அரிசிப்பை அடங்கிய உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. புது பஸ் ஸ்டாண்டில், மக்களுக்கு மரக்கன்றுகள், இனிப்புகள் வழங்கப்பட்டது.
கிணத்துக்கடவு ஒன்றிய தலைவர் சதீஷ்குமார், முன்னாள் ஒன்றிய துணைத் தலைவர் செந்தமிழ்செல்வி, ஒன்றிய மகளிர் அணி தலைவி சாவித்திரி உள்ளிட்ட பா.ஜ.,வினர் பங்கேற்றனர்.