/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதல்வரை கண்டித்து பா.ம.க., ஆர்ப்பாட்டம்
/
முதல்வரை கண்டித்து பா.ம.க., ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 29, 2024 12:17 AM
பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், தமிழக முதல்வரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.,வினரை போலீசார் கைது செய்தனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், சமீபத்தில் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்க்கு வேறு வேலை இல்லாமல் அறிக்கையை தினமும் கொடுத்து வருகிறார் என கூறி இருந்தார்.பா.ம.க., நிறுவனரை இழிவாக பேசியதாக, தமிழக முதல்வரை கண்டித்து தமிழகம் முழுவதும் பா.ம.க.,வினர் ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர். பொள்ளாச்சியில், கோவை தெற்கு மாவட்ட பா.ம.க., சார்பில், பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.கோவை தெற்கு மாவட்ட செயலாளர் வீரான் ராவுத்தர் தலைமை வகித்தார்.
அங்கு வந்த போலீசார், அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.,வினரை கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், முதல்வரை கண்டித்தும் கோஷமிட்டனர்.