தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பி.எம்.எஸ்., ஆர்ப்பாட்டம்

பி.எம்.எஸ்., ஆர்ப்பாட்டம்

பி.எம்.எஸ்., ஆர்ப்பாட்டம்


ADDED : மார் 01, 2024 01:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 01, 2024 01:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை;மின் கட்டண உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து பாரதிய மஸ்துார் சங்கத்தினர் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பாரதிய மஸ்துார் சங்கத்தின், மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் கோபால் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், பொது மக்களையும், குறு, சிறு தொழில் நிறுவனங்களையும் நிதி சுமைக்கு ஆளாக்கும் மின் கட்டண உயர்வை தமிழக அரசு 'வாபஸ்' பெற வேண்டும். அரசு ஊழியர் அனைவருக்கும் பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர்.

மாவட்ட அமைப்பு செயலாளர் முருகேசன், துாய்மை பணியாளர் பிரிவு மாவட்ட இணை அமைப்பு செயலாளர் ஸ்டாலின் பிரபு உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us