தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பி.என்.ஒய்.எஸ்., படிப்புகள் ஏராளம்

 பி.என்.ஒய்.எஸ்., படிப்புகள் ஏராளம்

 பி.என்.ஒய்.எஸ்., படிப்புகள் ஏராளம்


ADDED : மார் 27, 2026 06:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 27, 2026 06:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

த மிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழகத்தின் இணைப்புடன் செயல்படும் கல்லூரிகளில் 'பேச்சுலர் ஆப் நேச்சுரோபதி அண்டு யோஜிக் சயின்சஸ்' படிப்பு வழங்கப்படுகிறது.

படிப்பு காலம்: ஓர் ஆண்டு கட்டாய இன்டர்ன்ஷிப் உடன் மொத்தம் ஐந்தரை ஆண்டுகள்.

தகுதிகள்: * இந்திய குடிமகனாக இரு த்தல் வேண்டும். வெளிநாட்டினர் இப்படிப்பிற்கு விண்ணப்பிக்க தகுதி இல்லை.

 தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவராக இருத்தல் வேண்டும். தற்போது தமிழகத்தில் வசிக்கும் வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவராக கருதப்படமாட்டார்கள்.

 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழகத்தில் படித்தவராக இருத்தல் அவசியம்.

 17 வயது நிரம்பியரவராக இருத்தல் வேண்டும்.

 12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களையோ அல்லது இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது உயிரிதொழ்நுட்பம் ஆகியவற்றுடன் இதர பாடத்தையோ படித்திருக்க வேண்டும். நீட் தேர்வு எழுதியிருக்க வேண்டிய அவசியமில்லை.

ஒதுக்கீட்டு இடங்கள்: அரசு யோகா மற்றும் நேச்சுரோபதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள இடங்கள், அரசிடம் ஒப்படைக்கப்பட்ட சுயநிதி யோகா மற்றும் நேச்சுரோபதி மருத்துவ கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவற்றிற்கு பிரத்யேக கலந்தாய்வு வாயிலாக மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அதேபோல், சுயநிதி யோகா மற்றும் நேச்சுரோபதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டிற்கான இடங்களுக்கும் தனியாக கலந்தாய்வு நடைபெறுகிறது.

ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு, அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சிறப்பு இட ஒதுக்கீடு உண்டு.

விபரங்களுக்கு: https://tnhealth.tn.gov.in/

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us