/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போத்தனுார் - சென்னை பண்டிகை சிறப்பு ரயில்
/
போத்தனுார் - சென்னை பண்டிகை சிறப்பு ரயில்
ADDED : ஜூன் 06, 2025 05:55 AM
கோவை; பண்டிகை தினத்தை முன்னிட்டு, பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், போத்தனூர் - சென்னை இடையே வரும் ஞாயிறு மற்றும் திங்கள் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 8ம் தேதி, இரவு 11:30 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06028), சென்னை சென்ட்ரலை, 9ம் தேதி காலை 8:40 மணிக்கு சென்றடையும்.
மறு மார்க்கத்தில், சென்னை சென்ட்ரலில் இருந்து, வரும் 9ம் தேதி காலை 10:15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், (06027), போத்தனுாரை அதே நாள் இரவு 6:00 மணிக்கு வந்தடையும்.
இந்த ரயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூரில் நின்று செல்லும். போத்தனுாரில் இருந்து செல்லும் ரயில் பெரம்பூரிலும் நின்று செல்லும்.
இத்தகவலை, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.