ADDED : மார் 11, 2026 05:41 AM
அ நிறம் | அளவு
கோவை: போத்தனுார்-தன்பாத் 'அம்ரித் பாரத்' வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இன்று துவங்குகிறது.
பிரதமர் மோடி 'வீடியோ கான்பரன்சிங்' வாயிலாக இன்று கொடி அசைத்து துவக்கிவைக்கிறார். மாலை 5:30 மணிக்கு போத்தனுாரில் இருந்து புறப்படும் ரயில் (வ.எண்:06619) கோயம்புத்துார், திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி, விஜயவாடா வழியாக 13ம் தேதி மதியம் 12:30க்கு ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் ஸ்டேஷன் அடைகிறது. இந்த ரயிலுடன் எட்டு ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் உட்பட 22 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என, தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
