/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆய்வு மனு அளித்த போத்தனூர் ரயில் பயனர்கள் சங்கத்தினர்
/
தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆய்வு மனு அளித்த போத்தனூர் ரயில் பயனர்கள் சங்கத்தினர்
தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆய்வு மனு அளித்த போத்தனூர் ரயில் பயனர்கள் சங்கத்தினர்
தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆய்வு மனு அளித்த போத்தனூர் ரயில் பயனர்கள் சங்கத்தினர்
ADDED : நவ 20, 2025 04:17 AM

போத்தனூர்: தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், தனி ரயிலில் நேற்று காலை, போத்தனூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தார். அங்கு அம்ரித் பாரத் திட்டத்தில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டார்.
பயணியர் வந்து, செல்லும் நுழைவாயில், புதிய நுழைவாயில் ஆகியவற்றை பார்வையிட்டு, மேற்கொள்ளவேண்டிய பணி குறித்து கேட்டறிந்தார்.
வடகோவை ரயில்வே ஸ்டேஷன் சென்று, மேம்பாட்டு பணியை பார்வையிட்டார். கோவை ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரங்களில் பயணியர் வந்து, செல்வதில் உள்ள சிரமங்கள், கடைகள் குறித்து கேட்டறிந்தார்.
சேலம் கோட்ட மேலாளர் பன்னாலால், முதன்மை திட்ட மேலாளர் கங்கா ராஜு, மக்கள் தொடர்பு அலுவலர் மரிய மைக்கேல் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
போத்தனூர் ரயில் பயனர்கள் சங்க பொது செயலாளர் சுப்ரமணியன் பொது மேலாளரிடம் மனு அளித்தார்.
மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:
மங்களூரு - கோவை, எர்ணாகுளம்- - பெங்களூரு, மேட்டுப்பாளையம்- - தூத்துக்குடி (வாராந்திர) ரயில்கள், போத்தனூரில் நின்று செல்ல வேண்டும். போத்தனூரில் நின்று, தற்போது நிற்காமல் செல்லும் எர்ணாகுளம் --- காரைக்கால், கன்னியாகுமரி -- புனே, கன்னியாகுமரி -- பெங்களூரு, யஸ்வந்த்பூர் -- கண்ணூர், மங்களூரு -- புதுச்சேரி ரயில்கள், மீண்டும் நின்று செல்ல வேண்டும்.
செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலை, கோயம்புத்தூர் -- போடிநாயக்கனூர் வரை இயக்கவேண்டும்.
அதுபோல் சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலை, கோவை -- பொள்ளாச்சி வரையும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை -- மயிலாடுதுறை ஜன் சதாப்தி ரயிலை, சிதம்பரம் வரையிலும், கோயம்புத்தூர் -- மதுரை (முன்பதிவில்லாதது) ரயிலை, போடிநாயக்கனூர் வரையிலும் நீட்டிக்க வேண்டும்.
நிறுத்தப்பட்ட கோயம்புத்தூர் -- ராமேஸ்வரம், கோயம்புத்தூர் -- தூத்துக்குடி, கோயம்புத்தூர் -- போடிநாயக்கனூர் வரையிலான ரயில்களை, மீண்டும் இயக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறியிருந்தது.
மனுவை பெற்றுக்கொண்ட பொது மேலாளர், மேம்பாட்டு பணி முடிந்தபின் தேவையான ரயில்கள் இயக்கப்படும், மேம்பாட்டு பணியை விரைந்து முடிக்க, அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளதாக பதிலளித்தார்.
அதுபோல், கோவை தெற்கு வளர்ச்சி கூட்டமைப்பினர் கொடுத்த மனுவில், போத்தனூர் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து, மாநிலத்தின் தெற்கு பகுதிகளுக்கு கூடுதல் ரயில் சேவைகளை வழங்குதல், அம்ரித் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.
அமைப்பை சேர்ந்த சாமிநாதன், மோகன், லட்சுமி நாராயணன் உள்ளிட்டோர் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

