/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இலக்கிய வட்ட நிகழ்ச்சியில் கவிதை நுால்கள் வெளியீடு
/
இலக்கிய வட்ட நிகழ்ச்சியில் கவிதை நுால்கள் வெளியீடு
இலக்கிய வட்ட நிகழ்ச்சியில் கவிதை நுால்கள் வெளியீடு
இலக்கிய வட்ட நிகழ்ச்சியில் கவிதை நுால்கள் வெளியீடு
ADDED : ஏப் 23, 2025 12:38 AM

பொள்ளாச்சி,; பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் ஏப்ரல் மாத நிகழ்வு, அரிமா சங்க கட்டடத்தில் நடந்தது. தலைவர் அம்சப்ரியா தலைமை வகித்தார். செயலாளர் பூபாலன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து, கவிஞர் செந்திரு எழுதிய 'ஆதிவனத்தின் குருதி' என்ற கவிதை நுால் வெளியிடப்பட்டது.
என்.பி.டி., கல்லுாரி உடற்கல்வி இயக்குநர் தேவராஜன், நுாலை வெளியிட உடுமலை வரலாற்று ஆய்வு நடுவ துணைத் தலைவர் ராஜசுந்தரம் பெற்றுக் கொண்டார். கோவை கதிரிமில்ஸ் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சரவணன், நுாலை அறிமுகம் செய்தார்.
இதேபோல, கவிஞர் மஞ்சுளாதேவி எழுதிய 'இரண்டு கிராம் யானை' எனும் கவிதை நுாலை, பாலக்காடு விதை அமைப்பு தலைவர் ரமேஷ்குமார் அறிமுகப்படுத்தினார். எழுத்தாளர் ஷாராஜ் எழுதிய 'மாதீஸ்வரி' நாவலை, சித்துார் அரசு கல்லுாரி உதவிப் பேராசிரியர் உமாமகேஸ்வரி அறிமுகப்படுத்திப் பேசினார்.

