/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கவிதைக்கு இறந்த காலம் இல்லை: பாரதி பாஸ்கர்
/
கவிதைக்கு இறந்த காலம் இல்லை: பாரதி பாஸ்கர்
ADDED : செப் 15, 2025 11:31 PM

கோவை; கோவையில் ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், 'பாங்கறி பட்டி மண்டபம்' என்ற தலைப்பில், பட்டி மன்றம் நடந்தது.
'செஞ்சொற்களின் கவியின்பத்தின் இனிமையும், அழகும் -பெரிதும் வெளிப்படுவது, சிலப்பதிகாரத்திலே' என்று கவிஞர்கள் மகா சுந்தர் மற்றும் சிவநந்தினி, 'கம்பராமாயணத்திலே' என்று பேராசிரியர் விசாலாட்சி மற்றும் பிரிட்டோ, 'பெரிய புராணத்திலே' என்று பேராசிரியர் குருஞானம்பிகா, சிவசதீஷ் ஆகியோர் உரையாற்றினர்.
நடுவராக இருந்த பாரதி பாஸ்கர், ''எந்த கவிதை உணர்வின் உச்சத்தை தொடுகிறதோ அதுதான் கவியின்பமும், இனிமையும், அழகும் தரும் கவிதையாக இருக்கும்.
கவிதையில் சத்தியம் இருந்தால் அது நெஞ்சத்தை தொடும். உண்மைதான் கவிதைக்கு அழகு, கவிதைக்கு பொய் அழகு என்பதை பாரதி ஒப்புக்கொள்ளவில்லை. கவிதைக்கு இறந்த காலம் இல்லை. அதற்கு நித்தியமான நிகழ்காலம் மட்டும்தான் உண்டு,'' என்று பேசினார்.