/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரவுண்டானாவில் மாற்றம்; கருத்து கேட்கிறது போலீஸ்
/
ரவுண்டானாவில் மாற்றம்; கருத்து கேட்கிறது போலீஸ்
ADDED : அக் 16, 2024 10:50 PM
கோவை : கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, மாநகர போலீஸ் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. முக்கிய சாலைகள், போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படும் இடங்களில், போக்குவரத்து சிக்னல்கள் நீக்கப்பட்டு, 'யு டர்ன்' வளைவுகள் மற்றும் ரவுண்டானாக்கள் அமைக்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, செஞ்சிலுவை சங்கம் சந்திப்பில் நெரிசலை சரிசெய்யும் விதமாக, அங்கிருந்த ரவுண்டானாவில் மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டது. அதன்படி, சோதனை முயற்சியாக மூன்று ரவுண்டானாக்கள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.
இந்த மாற்றத்தை, நிரந்தரமாக செயல்பாட்டுக்கு கொண்டு வர போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஆகவே, ரவுண்டானாவில் ஏதேனும் மேம்படுத்த வேண்டியுள்ளதா, நிரந்தரமாக செயல்படுத்துவது சரியா என்பது குறித்து, பொது மக்கள் தங்கள் கருத்துக்களை, 81900 00100 என்ற வாட்ஸ்ஆப் எண் வாயிலாக தெரிவிக்கலாம் என, போலீசார் தெரிவித்தனர்.

