/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோர்ட்டுக்குள் புகுந்து கலாட்டா செய்தவரை போலீசார் 'தேடிக்கொண்டே' இருக்கிறார்கள்; கோர்ட் ஊழியர்கள் அச்சம்

ADDED : ஜூலை 02, 2025 11:03 PM
கோவை; போக்சோ கோர்ட்டின் உள்ளே புகுந்து தகராறில் ஈடுபட்டவர் தலைமறைவாக இருப்பதால், புகார் கொடுத்த ஊழியருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, தெற்கு உக்கடத்தை சேர்ந்தவர் ரிஸ்வான்,32: போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட இவர் மீது, கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.
ஜாமினில் சென்ற அவர், கடந்த 27ம் தேதி, கோவை முதன்மை போக்சோ கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது, திடீரென கோர்ட்டிற்குள் தேசிய கொடியுடன் புகுந்து தகராறில் ஈடுபட்டார்.
தன் மீதான வழக்கை, வேறு கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என்று கோஷமிட்டார். அப்போது அவரை, கோர்ட்டில் இருந்த வக்கீல்கள், ஊழியர்கள் கண்டித்தனர். ஆனால், வாயில் பிளேடு துண்டுகளை விழுங்கி, தற்கொலை செய்து கொள்வதாக, மிரட்டல் விடுத்தார். பின்னர் அங்கிருந்து தப்பிச்சென்றார்.
இது தொடர்பாக, கோர்ட் சிரஸ்தார் ராஜேஸ்வரி, ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகார் கொடுத்து, ஏழு நாட்களாகியும் கோர்ட்டிற்குள் புகுந்து கலாட்டாவில் ஈடுபட்டவரை இது வரை கைது செய்யவில்லை. அவரை தேடி வருவதாக போலீசார் கோர்ட்டில் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், அவர் மீதான போக்சோ வழக்கில், 4ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தீர்ப்பின் போது அவர் ஆஜராவாரா அல்லது போலீசார் கைது செய்து ஆஜர்படுத்துவார்களா என்பது, நாளை தெரியும்.
ஆனால், மிரட்டல் விடுத்த ரிஸ்வான், பல மணி நேரம் கோர்ட் வளாகத்தில் சுற்றித்திரிந்தும், கைது செய்ய போலீசார் முயற்சி செய்யவில்லை என்று, கோர்ட் ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதற்கிடையில், ரிஸ்வான் கைது செய்யப்படாததால், அவர் மீது புகார் கொடுத்த கோர்ட் பெண் ஊழியர் அச்சத்தில் இருக்கிறார்.