/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாடகை காரில் கஞ்சா கடத்தல்; இருவரை கைது செய்த போலீசார்
/
வாடகை காரில் கஞ்சா கடத்தல்; இருவரை கைது செய்த போலீசார்
வாடகை காரில் கஞ்சா கடத்தல்; இருவரை கைது செய்த போலீசார்
வாடகை காரில் கஞ்சா கடத்தல்; இருவரை கைது செய்த போலீசார்
ADDED : பிப் 05, 2025 12:55 AM
கோவை; கோவை, தெலுங்குபாளையம் பகுதியில், ஒரு சிலர் வாடகை காரில் கஞ்சா கடத்தி வருவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், போலீசார் வேடப்பட்டி ரோடு, தெலுங்குபாளையம் பகுதியில், வாகன தணிக்கை செய்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி, சோதனை செய்தனர். காரின் இருக்கைக்கு அடியில் ஒரு சாக்கில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள் தெலுங்குபாளையத்தை சேர்ந்த பிரவீன், 32 மற்றும் குமாரபாளையத்தை சேர்ந்த மாணிக்கம், 33 என்பதும் தெரியவந்தது. இருவரும் வழக்கு ஒன்றில் கைதாகி, கோவை மத்திய சிறையில் இருந்துள்ளனர். அப்போது, அங்கு ஒடிசாவை சேர்ந்த சேட்டன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
அவர் ஒடிசாவில் கஞ்சா, குறைந்த விலைக்கு கிடைக்கும் என தெரிவித்துள்ளார். இதையடுத்து, சிறையில் இருந்து வெளி வந்த பின்னர், பிரவீன், மாணிக்கம் இருவரும் ஒடிசா சென்று, குறைந்த விலைக்கு ஐந்து கிலோ கஞ்சா வாங்கி, ரயிலில் கடத்தி வந்தனர்.
இங்கு அதை அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தனர். தெலுங்குபாளையம் பகுதியில் விற்பனை செய்வதற்காக, வாடகை காரில் எடுத்து சென்றதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் பிரவீன், மாணிக்கம் இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 2 கிலோ கஞ்சா, மொபைல் போன், காரை பறிமுதல் செய்தனர்.