/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொங்கல் விழா போலீஸ் தடைநீக்கம்; வடக்கலுாரில் கொண்டாட்டம்
/
பொங்கல் விழா போலீஸ் தடைநீக்கம்; வடக்கலுாரில் கொண்டாட்டம்
பொங்கல் விழா போலீஸ் தடைநீக்கம்; வடக்கலுாரில் கொண்டாட்டம்
பொங்கல் விழா போலீஸ் தடைநீக்கம்; வடக்கலுாரில் கொண்டாட்டம்
UPDATED : ஜன 17, 2024 01:47 AM
ADDED : ஜன 16, 2024 10:38 PM
அன்னூர்;வடக்கலூரில் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் கோவிலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கோவை வடக்கு ஆர்.டி.ஓ., தலைமையில், கடந்த ஆறு மாதமாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வடக்கலூரில் வழக்கமாக கொண்டாடப்படும் மூன்று நாள் பொங்கல் விழாவிற்கு சட்டம் ஒழுங்கு பிரச்னை கருதி அன்னூர் போலீசார் தடை விதித்தனர். நேரு இளைஞர் மன்றத்தினரும், ஊர் பொது மக்களும் மூன்று நாள் நிகழ்ச்சிக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில் திடீரென 14ம் தேதி தடை விதிக்கப்பட்டதை அடுத்து அதிர்ச்சி அடைந்தனர்.
அன்னூர் தாசில்தார் காந்திமதியிடம் இதுகுறித்து புகார் தெரிவித்தனர். எந்த பிரச்னையும் இல்லாமல் திருவிழா நடத்தப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து வருவாய் துறையினர் பரிந்துரையின் பேரில் போலீஸ் தடை விளக்கிக் கொள்ளப்பட்டது.
இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் உற்சாகத்துடன் வடக்கலூரில் பொங்கல் விழா நடந்தது. ஓட்டம், தடையோட்டம், சாக்கு ஓட்டம், கோலம் என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
பரிசளிப்பு விழாவில் மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன், பேரூராட்சி முன்னாள் தலைவர் சவுந்தரராஜன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, மணியக்காரர் குடும்பத்தினர் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இன்றும் மூன்றாவது நாளாக பல்வேறு நிகழ்ச்சிகள் காலை முதல் இரவு வரை நடைபெறுகின்றன.

