/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விபத்து உயிரிழப்பு இல்லாத புத்தாண்டுமகிழ்ச்சியில் கொண்டாடுகிறது போலீஸ்

ADDED : ஜன 02, 2026 05:03 AM
கோவை,ஜன.2-
கோவை மாநகரில் விபத்து உயிரிழப்பு இல்லாத புத்தாண்டு தினமாக அமைந்ததால், மாநகர போலீசார் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, நகர் முழுவதும் 1,594 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முக்கிய சந்திப்புகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் வணிக வளாகம் மற்றும் பொழுதுபோக்கு பகுதிகள், வழிபாட்டு தலங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டன.
முக்கிய இடங்களில் பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், போக்குவரத்தை நெரிசல் ஏற்படுவதை குறைக்கவும் போலீசார் இரவு முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மதுபோதையில் அதிவேகமாகவும் அலட்சியமாகவும், விபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டுவதை தடுக்க முக்கிய சாலைகளில், போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். பொதுமக்கள் அதிகம் கூடும், 15 இடங்கள் கண்டறியப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
அதிவேகமாக ஓட்டியதாக 150 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. குடிபோதையில் வாகனம் ஓட்டிய 29 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன் எச்சரிக்கை நடவடிக்கையால் நகரில் குற்ற சம்பவங்கள், விபத்துகள், உயிரிழப்புகள் ஏற்படவில்லை. இது இனிமையான புத்தாண்டாக அமைந்தது என போலீஸ் அதிகாரிகள் கூறினர்.