/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேலைக்கு போனால் கையில் பணம் வரும் இ.எம்.ஐ.யில் செல்போன், பைக் வாங்கலாம் கோவை, திருப்பூரில் மாணவர் வருகை சரிவுக்கு காரணம் இதுதான்

ADDED : ஜன 02, 2026 05:02 AM
கோவை: அரசுப் பள்ளி மாணவர்களின் வருகைப் பதிவு முழுமையான அளவை எட்டுவதில் சவாலாக உள்ளது என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஒரு வகுப்பிற்கு சராசரியாக 5க்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுப்பு எடுப்பதாக கூறப்படுகிறது.
அரசு பள்ளிகளில் தேர்வு நடைபெறும் காலங்களில் மட்டும் 90 முதல் 98 சதவீதம் வரை வருகைப் பதிவு காணப்படுகிறது. ஆனால், இதர நாட்களில் மாணவர்களின் வருகை மிகக் குறைந்த அளவே உள்ளது. குறிப்பாக, 5 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களிடம் இந்த போக்கு அதிகளவில் காணப்படுகிறது. அதேபோல், நடப்பு கல்வியாண்டு முதல் பிளஸ் 1க்கு பொதுத்தேர்வு இல்லை என்பதால், அந்த வகுப்பு மாணவர்களும் அதிகளவில் விடுப்பு எடுப்பதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
மேல்நிலை வகுப்பு ஆசிரியர்கள் கூறுகையில், விடுமுறை நாட்கள் மற்றும் தேர்வு விடுமுறை காலங்களில் மாணவர்கள் கேட்ரிங் வேலைகளுக்கும், பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தென்னை தோப்பு வேலைகளுக்கும் செல்கின்றனர். இதனால் சிறு வயதிலேயே அவர்களிடம் அதிகளவில் பணம் புழங்குகிறது. அந்தப் பணத்தைக் கொண்டு விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் டூ வீலர்களை இ.எம்.ஐ. முறையில் வாங்குவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். 75 சதவீதம் வருகை பதிவு இருந்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதி என மாணவர்களிடம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம், 'என்றனர்.
8ம் வகுப்பு வரை 'ஆல் பாஸ்' என்ற நடைமுறை இருப்பதால், ஒரு சில மாணவர்கள் கல்வி மீதான ஆர்வத்தை இழந்து விடுப்பு எடுக்கின்றனர். ' பள்ளிக்கு செல்' என ஒருசில பெற்றோர்களும் மாணவர்களிடம் போதிய அழுத்தம் கொடுப்பதில்லை என இடைநிலை ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி கூறுகையில், ''கோவை தொழில்நகரம் என்பதால்,வெளியூர்களில் இருந்து குடிபெயர்பவர் களின் எண்ணிக்கை அதிகம். மாநில அளவில் கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் அரசுப் பள்ளி மாணவர்களின் வருகைப் பதிவு முழுமையான அளவை எட்டுவது, சவாலாக உள்ளது. எனினும், மாணவர்களின் வருகைப் பதிவை அதிகரிக்கவும், இடைநிற்றலைத் தவிர்க்கவும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,''என்றார்.