/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பூட்டிய வீடுகளை கண்காணிக்க புதிய செயலி போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தகவல்
/
பூட்டிய வீடுகளை கண்காணிக்க புதிய செயலி போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தகவல்
பூட்டிய வீடுகளை கண்காணிக்க புதிய செயலி போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தகவல்
பூட்டிய வீடுகளை கண்காணிக்க புதிய செயலி போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தகவல்
ADDED : ஜன 05, 2024 01:05 AM
கோவை;மாநகரில் பூட்டி உள்ள வீடுகளை கண்காணிக்க புதிய செயலி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதுகுறித்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:
கொள்ளை சம்பவங்களை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். பெரும்பாலானோர் வீடுகளை பூட்டி வெளியூர் செல்லும் போது போலீசாருக்கு தகவல் தெரிவிப்பது இல்லை. எனவே பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கும் முறையை எளிமைப்படுத்த புதிய செயலியை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் மூலம் பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தால், பூட்டிய வீடுகளுக்கு பாதுகாப்பு அளிக்க முடியும், கொள்ளை சம்பவங்களை தடுக்க முடியும்.
மேலும், கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் விபத்துக்களை, 10 சதவீதம் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் விபத்து ஏற்பட்டால், காயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ் டிரைவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல், சற்று தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்கள். இதனால் சில நேரங்களில் உயிரிழப்பு ஏற்படுகிறது. கோவையில், 10 மருத்துவமனைகளில் இன்னுயிர் காப்போம் திட்டம் மூலம், 48 மணி நேரம் இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு விபத்து உயிரிழப்புகளை குறைக்க முடியும்.
நடப்பாண்டில் குற்றசம்பவங்களை குறைக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது. போலீசார் குறுகிய தெருக்களில் ரோந்து செல்ல கடந்த ஆண்டு இரண்டு ஆட்டோக்கள் வாங்கப்பட்டது. தற்போது அதேபோல கூடுதலாக, 5 ஆட்டோக்கள் வாங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.