/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கானா பாடகி மீது போலீசில் புகார்
/
கானா பாடகி மீது போலீசில் புகார்
ADDED : டிச 03, 2024 11:27 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷனில், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில், கானா பாடகி இசைவாணி மீது புகார் அளிக்கப்பட்டது.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில், கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷனில், ஐயப்ப சுவாமியையும், பக்தர்களையும் இழிவு படுத்தும் விதமாக கானா பாடல் பாடிய இசைவாணி மீது புகார் அளிக்கப்பட்டது.
இது போன்ற பாடல்கள் தமிழகத்தில் இணக்கமாக வாழும் பலதரப்பட்ட மக்களிடையே, சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. மேலும், ஹிந்து மதத்தினர் வணங்கும் தெய்வத்தை இழிவுபடுத்துவது, அந்த மதத்தைச் சேர்ந்த மக்களை காயப்படுத்தும் விதமாகவும் உள்ளது.
எனவே, பொது அமைதிக்கும், சமூக நல்லிணக்கத்திற்கும், கேடு விளைவிக்கும் விதமாக பாடல் பாடிய இசைவாணி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என, புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.