/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தோட்டங்களில் கள் விற்பனை போலீஸ் கண்டுகொள்வதில்லை
/
தோட்டங்களில் கள் விற்பனை போலீஸ் கண்டுகொள்வதில்லை
ADDED : ஜூலை 13, 2025 05:44 AM
தொண்டாமுத்தூர் : தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள சில தோட்டங்களில், மறைமுகமாக 'கள்' விற்பனை ஜோராக நடந்து வருகிறது.
தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இந்நிலையில், தொண்டாமுத்தூர், பேரூர், ஆலாந்துறை, காருண்யா நகர் உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், சில தோட்டங்களில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட தென்னை மரங்களில், 'கள்' இறக்கி வருகின்றனர்.
காலை, 6:00 மணி முதலே, மறைமுகமாக 'கள்' விற்பனையும் ஜோராக நடந்து வருகிறது. தொண்டாமுத்தூர் வட்டாரப்பகுதியில், சில கிராமங்களில் இருந்து டாஸ்மாக் மதுக்கடைக்கு, 10 கி.மீ., தொலைவு செல்ல வேண்டியுள்ளது.
அதோடு, டாஸ்மாக் கடை, பகல், 12:00 மணிக்கே திறக்கப்படும். அதற்கும், பார்களில், 'சில்லிங்' விற்பனையில், அதிக விலைக்கு மது விற்பனை செய்வதாலும், அதிகாலை, 'கள்' குடிக்க பலரும் செல்கின்றனர்.
தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், ஒரு லிட்டர் கள், 120 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர். ஆனால், போலீசாரும் இதனை கண்டுகொள்வதில்லை.