ADDED : ஏப் 17, 2026 08:19 PM

சூலூர்: போலீசார், தீயணைப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் அலுவலர்கள் தங்கள் தபால் ஓட்டுக்களை பதிவு செய்தனர்.
சூலூர் தொகுதியில் உள்ள போலீசார், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் அலுவலர்கள், பணியாளர்கள் தங்கள் தபால் ஓட்டுகளை நேற்று பதிவு செய்தனர். சூலூர் தொகுதியில் மட்டும், 600க்கும் மேற்பட்டோர் தபால் ஓட்டளிக்க படிவங்கள் வழங்கி இருந்தனர். அவர்களுக்காக, சூலூர் தாலுகா அலுவலகத்தில், தபால் ஓட்டுப்பதிவு நேற்று துவங்கியது.
தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், போலீசார், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட பலர் தங்கள் தபால் ஓட்டுகளை செலுத்தினர். தபால் ஓட்டுப்பதிவு நடக்கும் இடத்தில் துணை ராணுவ படையினர், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 200 க்கும் மேற்பட்டோர் நேற்று தபால் ஓட்டளித்தனர். தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெகநாதன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ராஜேந்திரன், செந்தில்குமார் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
