ADDED : ஏப் 16, 2026 09:10 PM

சூலூர்: சட்டசபை தேர்தல் நடப்பதை ஒட்டி, சூலூரில், போலீசார் மற்றும் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
தமிழகத்தில், ஏப். , 23 ம்தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி நேற்று முன்தினம் சூலூர் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் தலைமையில், கேரள போலீசார், எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் என, 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடந்தது. திருச்சி ரோடு மற்றும் முக்கிய வீதிகள் வழியாக கொடி அணிவகுப்பு நடந்தது.
கோவை ரூரல் எஸ்.பி., கார்த்திகேயன் உத்தரவின் படி, மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி., பாஸ்கரன் தலைமையில், துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். மேட்டுப்பாளையம் காட்டூர் பகுதியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, ரயில்வே கேட், கரிமேடு, எல்.எஸ்.புரம்., வழியாக ஊட்டி சாலையில் கொடி அணிவகுப்பு முடிவுற்றது.
பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் அச்சமின்றி வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிப்பதற்காக, இந்த கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், தேர்தல் தொடர்பாக எந்த தகவல் இருந்தாலும் போலீசாருக்கு தெரிவிக்கலாம் என கேட்டுக்கொண்னர்.
---
--
