/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலீஸ் குறைதீர் கூட்டம் :63 மனுக்களுக்கு சுமுக தீர்வு
/
போலீஸ் குறைதீர் கூட்டம் :63 மனுக்களுக்கு சுமுக தீர்வு
போலீஸ் குறைதீர் கூட்டம் :63 மனுக்களுக்கு சுமுக தீர்வு
போலீஸ் குறைதீர் கூட்டம் :63 மனுக்களுக்கு சுமுக தீர்வு
ADDED : பிப் 23, 2024 12:34 AM
கோவை;கோவை ரூரல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மக்களுக்கான குறைதீர்ப்பு கூட்டத்தில் விசாரணைக்கு வந்த, 81 மனுக்களில் 63 மனுக்கள் சுமுக தீர்வு காணப்பட்டது.
கோவை ரூரல் போலீஸ் சார்பில் மக்கள் குறைதீர்ப்புக்கூட்டம் டாக்டர் பாலசுந்தரம் சாலையிலுள்ள போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடந்தது. ரூரல் எஸ்.பி., பத்ரிநாராயணன் தலைமை வகித்தார். இம்முகாமில் குடும்ப பிரச்னை, பணப்பரிமாற்றம், இடம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னை குறித்து 81 பேர் மனுக்களை அளித்தனர்.
அதில் 2 மனுக்கள் மீது முதல்தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது. 63 மனுக்கள் மீது சுமுகமான தீர்வு காணப்பட்டது. 16 மனுக்கள் மீது மேல் விசாரணை செய்ய பரிந்துரை செய்யப்பட்டது.