/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலீஸ் குடியிருப்பு கட்டும் பணி தீவிரம்: மேற்கு ஸ்டேஷன் இடமாற்ற வலியுறுத்தல்
/
போலீஸ் குடியிருப்பு கட்டும் பணி தீவிரம்: மேற்கு ஸ்டேஷன் இடமாற்ற வலியுறுத்தல்
போலீஸ் குடியிருப்பு கட்டும் பணி தீவிரம்: மேற்கு ஸ்டேஷன் இடமாற்ற வலியுறுத்தல்
போலீஸ் குடியிருப்பு கட்டும் பணி தீவிரம்: மேற்கு ஸ்டேஷன் இடமாற்ற வலியுறுத்தல்
ADDED : ஆக 07, 2025 07:47 PM

பொள்ளாச்சி:
பொள்ளாச்சியில் போலீஸ் குடியிருப்பு கட்டும் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், மேற்கு போலீஸ் ஸ்டேஷன் இடம் மாற்றம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு காவலர் குடியிருப்பு வீட்டு வசதி வாரியம் வாயிலாக, 76.15 கோடி ரூபாய் செலவில் புதிய குடியிருப்புகள் கட்டும் பணிக்காக சில மாதங்களுக்கு முன் அடிக்கல் நாட்டப்பட்டது. அதில், எட்டு இன்ஸ்பெக்டர்கள், 20 எஸ்.ஐ.,க்கள், 194 போலீசார் என, மொத்தம், 222 வீடுகள் கட்டப்பட உள்ளன. இதற்காக டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
குடியிருப்பு கட்டப்படும் இடம் அருகே உள்ள, மேற்கு போலீஸ் ஸ்டேஷனை மாற்று இடத்துக்கு மாற்ற காவலர் வீட்டு வசதி வாரியம் வாயிலாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன் அருகே வாடகை கட்டடத்துக்கு போலீஸ் ஸ்டேஷன் மாற்றுவதற்கான ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், நகராட்சிக்கு உட்பட்ட சந்தை உள்ளிட்ட பகுதிகளில் ஸ்டேஷன் கட்ட இடம் ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் கோரப்பட்டது. போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் இடமாற்றவும் இடம் தேடப்பட்டது.
ஆனால், மூன்று மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் இடம் மாறாமல் அதே இடத்தில் போலீஸ் ஸ்டேஷன் செயல்படுகிறது. இதனால், அந்த இடத்தை காலி இடமாக காட்ட முடியாத நிலை உள்ளது.
இது குறித்து, காவலர் வீட்டு வசதி வாரியம் வாயிலாக, போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தற்போது ரயில்வே ஸ்டேஷன் அருகே தேர்வு செய்யப்பட்ட இடத்துக்கு, ஆவணி மாதத்தில் போலீஸ் ஸ்டேஷனை இடமாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
போலீஸ் குடியிருப்பு கட்டப்பட்டும் இடத்தில் நகராட்சிக்கு சொந்தமான ரோடு உள்ளது. அங்கு உள்ள மின்கம்பங்கள் பராமரிப்பின்றியும், சேதமடைந்தும் உள்ளன. மேலும், மின் ஒயர்கள் கீழே தொங்குகின்றன. இது குடியிருப்பு கட்டட பணிகளுக்கு இடையூறாக உள்ளதால், பயன்பாடு இல்லாமல் உள்ள மின்கம்பங்களை அகற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.