/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்
/
போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்
ADDED : மே 26, 2025 11:58 PM
கோவை; கோவை மாநகரில் உள்ள ஏழு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
அதன்படி, கோவை குனியமுத்துார் சட்டம், ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், வெரைட்டிஹால் ரோடு விசாரணை பிரிவுக்கும், சுந்தராபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு கனியன், சுந்தராபுரம் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் வினோத்குமார், கோவை மாநகர குற்றப்பிரிவுக்கும், பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
ரேஸ்கோர்ஸ் சட்டம், ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜூன்குமார் பீளமேடு சட்டம், ஒழுங்கு பிரிவுக்கும், கோவை பீளமேடு சட்டம், ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி ரேஸ்கோர்ஸ் சட்டம், ஒழுங்கிற்கும், கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்து வந்த நெப்போலியன், குனியமுத்துார் சட்டம், ஒழுங்கிற்கும், இன்ஸ்பெக்டர் ராணி, கிழக்கு மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.